India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் பி கஸ்பா ரெட்டி தோப்பு, சான்றோர் குப்பம், மற்றும் மேல்மிட்டாலம் வெங்கட சமுத்திரம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாச்சம்பட்டு மற்றும் பேராம்பட்டு சோதனைச் சாவடிகளையும் எஸ்பி பார்வையிட்டார்.
வாணியம்பாடியில் எல்ஐசி கிளை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி முகவருக்கும் கிளை மேலாளருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் எல்ஐசி முகவர் இருசப்பன் என்பவரை மூக்கு மீது குத்தியதில் ரத்தம் சொட்ட சொட்ட வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வேலூர் ஆகிய 6 சட்டம் மன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பதிய நீதி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வேலூர் ஆகிய 6 சட்டம் மன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார், இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம். செவ்வத்தூர். அடுத்த பெரியார் நகர். காளியம்மன் திருவிழா மற்றும் வேம்பரசு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு கோகுல கண்ணா நாடக சபா வழங்கும் மகுடவரதன் அரவான் சாபம் என்னும் தெருக்கூத்து நாடகம் அதி விமர்சையாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திருவண்ணாமலையில் DR இரா.ரமேஷ் பாபு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்றம்பள்ளியில் 23.03.2024 நேற்று மாலை 5 மணியளவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஆவணம் இன்றி ரூபாய் 1, 62, 800 பறிமுதல் செய்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் தங்க மலைமேல் உள்ள சென்றாய சாமி ஆலயத்தின் உற்சவ விழாவின் 5 ஆம் நாளான இன்று சுவாமியின் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் பல இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.