India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று (ஏப்.30) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றில் ஆம்பூர் காங்கிரத்தியா பகுதியை சேர்ந்த லோகேஷ் (24), பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (22), வாத்தி மனை பகுதியை சேர்ந்த முஜிபுர் அகமது (24) ஆகிய 3 கஞ்சா மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
வாணியம்பாடி அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கிரி சமுத்திரம் பகுதியில் சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புல்டோசர் எந்திரத்தின் மீது 45 பயணிகளுடன் திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியதில் 8 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே திருப்பதியில் இருந்து பெங்களூரு வரை செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ஏசி கோச் ஏர் பைப் கட்டானதால் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டது. இன்று மாலை ஆறு மணிக்கு பழுதடைந்த காரணத்தினால் ரயில் பெட்டியில் பயணம் செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
நாளை மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி நாளை மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
திருப்பத்தூர் அருகே தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூரில் ஏலகிரி மலையில் அமைந்துள்ளது செய்கையாக உருவாக்கப்பட்ட புங்கனூர் ஏரி. பூங்காவை ஒட்டி உருவாக்கப்பட்ட இந்த ஏரி 25 அடி ஆழமும் 60 சகிமீ நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. இந்த எரியில் இங்குள்ள படகு கிளப், பெடல் மற்றும் மோட்டார் படகு சவாரிகளை வழங்குகிறது. மேலும் ஒரு மரத்தின் மீது வீயூவ் பாயிண்டும் உள்ளது. மேலும் நடைபாதை, நீர்வீழ்ச்சி, உயிரியல் பூங்காவும் அமைந்துள்ளது.
திருப்பத்தூரில் நேற்று (ஏப்.29) 107.6 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
திருப்பத்தூர் பள்ளிப்பட்டு பகுதியில் இன்று தருமபுரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. லாரி மற்றும் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழையபாளையம் கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி (55), திருப்பதி (45) ஆகியோா் உரிமம் இல்லாத துப்பாக்கியை பயன்படுத்தி முள்ளம்பன்றியை கொன்று சமைத்து கொண்டிருப்பதை பாா்த்த வனத்துறையினா் அவா்களைப் பிடித்து வனஉயிரின குற்ற வழக்கு பதிவு செய்து திருப்பத்தூா் சிறையில் அடைத்தனா்.
Sorry, no posts matched your criteria.