Tirupathur

News April 24, 2024

திருப்பத்தூர்: 5 கடைகளுக்கு சீல் வைப்பு

image

ஆம்பூர் அடுத்த உமராபாத்,குட்டகத்தூர், வன்னியநாதபுரம் , மாச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ததாக 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

News April 22, 2024

திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு பலி

image

காட்பாடி லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று (ஏப்ரல்.21) ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 40 வயதுதக்க நபர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டனர். 

News April 21, 2024

ஜோலார்பேட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்

image

கோயம்புத்தூர் – பருணி இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 06059 கோவையில் இருந்து ஏப்.23 ம்தேதி பகல் 11.50க்கு புறப்படுகிறது இதேபோல் வண்டி எண் 06060 பருணியில் இருந்து 26ஆம் தேதி இரவு 11.45க்கு புறப்படுகிறது. ஜூன் 28ம் தேதி வரை சிறப்பு ரயில் இயங்கும்.

News April 21, 2024

திருப்பத்தூர்: சைக்கிளில் மோதி 2 பேர் படுகாயம்

image

வாணியம்பாடி அருகே கொத்தகோட்டையை சேர்ந்தவர் சிவ மூர்த்தி. இவர், தனது நண்பர் வெங்கடேசனுடன் பைக்கில் மண்டலவாடி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சிவமூர்த்தி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News April 21, 2024

திருபத்தூர்: பெண்ணை கேலி செய்த 2 பேர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராமநாயக்கன் பேட்டை பகுதியில் வசிக்கும் திவாகர் சந்தீப் மற்றும் அரவிந்தன் ஆகியோர் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்துள்ளனர். இதுகுறித்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் அம்பலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 21, 2024

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் ஒரே சம சீதோஷ்ண நிலை ஏற்படுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் இன்று கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்தனர். இதனால் படகு சவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

News April 21, 2024

ஜோலார்பேட்டை அண்ணனை கொலை செய்த தம்பி கைது

image

ஜோலார்பேட்டை அருகே எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் சந்தோஷ் (30). இவர் கடந்த 16 ஆம் தேதி தனது தாய் மலரிடம் மது போதையில் சாப்பாடு போட சொல்லி தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர் சஞ்சய் வீட்டின் அருகே ஹாலோ பிரிக்ஸ் கல்லை எடுத்து தலை மீது போட்டு தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாயார் மலர் கொடுத்த புகாரில் ஜோலார்பேட்டை போலீசார் இன்று சஞ்சயை கைது செய்தனர்.

News April 20, 2024

ஏலகிரி மலையில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டங்களின் ஆந்திர எல்லையோர பகுதிகள் மற்றும் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைப் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‌இதனால் கோடைகால வெயில் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 20, 2024

பைக் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி

image

திருப்பத்தூர், ஆம்பூர் தாலுகா மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் (ஏப்ரல்.19) நாச்சியார குப்பம் பகுதியை சேர்ந்த எழிலரசன்(47) (கூலி தொழிலாளி) இவரது பைக் மீது ஆலாங்குப்பம் முருகன் (55) என்பவரின் பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேர் படுகாயடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி எழிலரசன் உயிரிழந்தார். ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2024

ஜோலார்பேட்டையில் அதிக வாக்குப்பதிவு

image

திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், திருப்பத்தூர், கீழ்பென்னாத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகள் அடங்கும். திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தலில் 73.88 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் ஜோலார்பேட்டை தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 76.15 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக திருவண்ணாமலையில் 70.09 சதவீதம் பதிவாகியுள்ளது.

error: Content is protected !!