India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் இரவு நேரங்களில் தங்கள் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட எல்லை கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் தொலைபேசி எண் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் கூலி பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தொழிற்சாலையில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் பெயரில் தொடரும் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு சம்பவங்களால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்.பி ஷ்ரேயா குப்தா குற்ற செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று 21ஆம் தேதி இரவு திங்கட்கிழமை வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பெயர் மற்றும் மொபைல் எண்கள் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற வாராந்திர திங்கள் தின குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 354 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செய்தி குறிப்பில் இன்று (அக்டோபர்.21) இணையவழி பணமோசடி பற்றிய புகார்களை உதவி எண் 1930-ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும், சைபர் குற்றங்களை பற்றிய புகாரை https://www.cybercrime என்ற இணையதள முகவரி மூலமும் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளற்றது. மேலும், தீபாவளி தள்ளுபடி செய்தியை நம்பவேண்டாம் என நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோலார்பேட்டை அருகே அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கான வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டு லடாக் பகுதியில் மறைந்திருந்து சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டதில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக இன்று வீரவணக்க நாள அனுசரிக்கப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருப்பத்தூர் அடுத்த கோனாபட்டு பகுதியில் இயங்கி வரும் தற்காப்புக்கலை பயிற்சி வகுப்பு மூலமாக திருப்பத்தூர் மாவட்ட மாணவர்கள் அனைவரும் சங்கராபுரம் பகுதியில் நடைபெற்ற ஆஸ்கர் உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து 40 நிமிடம் சிலம்பம் மற்றும் கராத்தே செய்து உலக சாதனை செய்து திருப்பத்தூருக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவிக்கலாமே.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் சைபர் க்ரைம் துறை சார்பில் பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய இணையதளங்களில் தள்ளுபடிகள் அறிவித்து தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் மோசடி ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த பிக்கப் வாகனம் சற்று முன்னர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.