India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை சேர்ந்த செல்வராஜ் (34). இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இன்று ஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி பச்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த ஜின்னா சாலையில் இன்று மாலை 5 மணியளவில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் ஜீவா நகரை சேர்ந்த அஸ்லாம் பாஷா படுகாயம் அடைந்தார். 108 வாகனத்தில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.60 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 80.42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் தாலுகா ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலை பள்ளியில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவன் யுவராஜ் 465 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் மாணவனுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நாளை (மே 11) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாணவர்களின் சந்தேகங்களை நீக்கி உயர்கல்வி படிப்புகளை தேர்வு செய்யும் தகவல்களை தெளிவுபடுத்துகின்றனர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
வாணியம்பாடி மதுவிலக்கு காவலர் ஆறுமுகம் நேற்று நாட்டறம்பள்ளி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் இன்று அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து ஆறுமுகம் இழப்பிற்கு தமிழ் நாடு காவல்துறை அவரது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியாங்குப்பம் ஊராட்சி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (60) ,கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு 8 மணிக்கு (மே.9) ஆம்பூரில் இருந்து பெரியாங்குப்பம் ஆட்டோவில் வந்தபோது ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.26% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.91 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.5 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டம் 28ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 88.20 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.80 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.63 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.