India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை திருப்பத்தூரில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருப்பத்தூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வாணியம்பாடி வட்டம் ஆலங்காயம் சாலை வேப்பமரச் சாலை பகுதியில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மே 10ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். www. skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாகவும் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரிய ஏரி திருப்பத்தூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரிக்கு, பாச்சல் ஏரி, மாடப்பள்ளி ஏரி, அண்ணாண்டப்பட்டி ஏரி, புதுக்கோட்டை ஏரி என 4 ஏரிகளில் இருந்து உபரிநீர் சென்றடைகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பாதர் கெசு ரோட்டில் இன்று அதிகாலை வட மாநில இளைஞர்கள் 3 பேர் சுற்றி திரிந்தனர். அப்போது சீனு என்பவர் தங்கியுள்ள வீட்டின் சுவர் மீது ஏறி குதிக்கும் போது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து தென்னை மரத்தில் கட்டி போட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மற்ற இருவரும் தப்பி ஓடினர். போலீசார் வடமாநில இளைஞரை கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு புதூர் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் காவாய் இல்லாமல் சாலையில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை அடுத்த புதூர் இரண்டாவது வார்டு படவேட்டம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் காவாய் ஏற்பாடு செய்து தர ஊர் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 100.22 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 75.74 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
நாட்றம்பள்ளி அருக மடப்பள்ளம் பகுதியில் மேல்பட்டி பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் இன்று கிராம பகுதிகளில் வேளாண்மை அனுப பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.ர் கல்லூரி முதல்வர் மணிகண்டன் ஆலோசனையின் படி பேராசிரியர் வைத்தீஸ்வரி தலைமையிலான குழுவினர் வேளாண்மை உயிர் உரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் ராமன் என்பவரின் குடிசை வீடு நேற்று இரவு பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்தது. உடனே விழித்துக் கொண்ட ராமன் தனது குழந்தைகள் பேரன் மகள் மருமகன் அனைவரையும் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேறியதால் காயமின்றி உயிர் தப்பினர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாலை 5 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் மகப்பேறு இறப்பு விகிதம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இறப்பு விகிதம் குழந்தைகள் திருமணம் பாலின விகிதம் மருத்துவம் காசநோய் தொழுநோய் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.