Tirupathur

News May 23, 2024

ரூ.650 கோடியில் புதிய மருத்துவமனை

image

சின்னமோட்டூர் பகுதியில் ரூ.650 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைய உள்ள இடங்களில் அரசுத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கனவே சின்னக்கல்லுப்பள்ளி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்க இடம் ஆய்வு செய்யபட்ட நிலையில் தற்போது மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைய இருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

News May 23, 2024

திருப்பத்தூர்: கால அவகாசம் நீட்டிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் பழனிசாமி ரோடு சக்தி நகரில் உள்ள துயநெஞ்ச கல்லூரியில் (தன்னியல்) உள்ள மாணவர்கள் உதவி மையத்தில் இன்று  திருவள்ளுவர் பல்கலையில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் இன்று முதல் மே26ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுறது‌. மேலும் இளநிலை பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் சேர்க்கைக்கு கலந்துரையாடல் நடைபெறுகிறது.

News May 23, 2024

அனுமதியின்றி நடந்த கன்று விடும் திருவிழா

image

திருப்பத்தூர் அடுத்த கூடப்பட்டு பகுதியில்  முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணி அளவில் கன்று விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வாடி வாசல் வழியாக கன்றுகள் சீறிப்பாய்ந்து ஓடியது. இந்த கன்றுவிடும் திருவிழாவிற்கு வருவாய்த்துறை இடமும் காவல்துறையிடமும் உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

News May 23, 2024

திருப்பத்தூரில் ஆள்மாறாட்டம் – அதிரடி நடவடிக்கை

image

திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆயிஷா சித்தி மற்றும் கயல்விழி ஆள்மாறாட்டம் செய்து 1800 சதுர அடி இடத்தை பதிவு ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் 2007 ஆம் வருடம் ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்த இரண்டு பத்திரங்களையும் புகாரின் அடிப்படையில் மாவட்ட பதிவுத்துறை அலுவலர் பிரகாஷ் ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

News May 23, 2024

திருப்பத்தூர் அருகே 6 பேர் கைது

image

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் கடந்த 18ஆம் தேதி கல்குவாரியில் பணிபுரியும் கூலித்தொழிலாளி சுதீஷ் மர்ம நபர்களால் தாக்கி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இதுகுறித்த புகாரின் அடிப்படையில், கிராமிய காவல் நிலைய போலீசார் சுதீஷை தாக்கிய இளைஞர்கள் ஆறு பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

News May 23, 2024

ஆம்பூரில்: ஆபத்தான நிலையில் தொடரும் அவலம்

image

ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்‌. நேற்று மாலை 5 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மனைவி தனம்மாள் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு அருகில் உள்ள பாலாற்று நீரை கடந்து ஆபத்தான முறையில் உடலை தூக்கிச் செல்ல கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

News May 22, 2024

திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை!

image

திம்மாம்பேட்டையில் தொடர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த முக்கிய நபரான முருகன், கப்பல் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். இதையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.

News May 22, 2024

திருப்பத்தூரில் 94.10 ஃபாரன்ஹீட் வெப்பநிலை!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 ஃபாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் நேற்று(மே 21) திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 94.10 ஃபாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 76.10 ஃபாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

News May 21, 2024

பழங்குடி இன மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ஒன்றிய அரசின் பழங்குடிஇன அமைச்சகத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு (PhD) மற்றும் முனைவர் பட்டப்படிப்பை National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் இனையவழியில்  விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News May 21, 2024

ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

image

நாட்றம்பள்ளி தாலுகா பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் பழனி மகன் பிரகாஷ் (22). இவர் இன்று அதிகாலை காலை சென்னை மார்க்கமாக செல்லும் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!