India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் என்னும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு சுனை உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை மனதில் நினைத்து கொண்டு வாழைப்பழத்தை அந்த சுனையில் விடுகின்றனர். அந்த பழம் மீண்டும் மேல வந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வி துறை மற்றும் பொது நூலக இயக்கம் இனைந்து நடந்தும் 4ஆம் ஆண்டு புத்தக திருவிழா 22.03.2025 முதல் 31.03.2025 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
2025 ஆம் ஆண்டிற்கான உலக தண்ணீர் தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தின கிராம சபைக் கூட்டங்கள் 23.03.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ,சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யான உதவி எண்களாகும். பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன. சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக சைபர் குற்றங்களுக்கான உதவி எண் : 1930 தொடர்பு கொள்ளலாம் என பதிவேற்றம் செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து <
திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டி மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற 435 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வழங்கினார்.
இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னையைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த <
208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த <
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்.15) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 100க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளன. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.