India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூர் அடுத்த மோட்டு கொல்லை பகுதியில் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபர்ரனர். அப்போது ஷபியுல்லா என்பவர் கடையில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் 22 பாக்கெட். பான் மசாலா 27 பாக்கெட் வைத்திருந்ததாக ஷபியுல்லா மீது நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னூர் கிராமத்தில் உரிய அனுமதியின்றி மண் மற்றும் மணல் கடத்தி வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை சின்னூர் கிராமத்திலிருந்து கந்திலியை நோக்கி மணல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி கந்திலி அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்
திருத்தணியில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு சொந்த ஊரான ஒசூருக்கு இன்று வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதாமல் இருக்க வேனை ஓட்டுநர் திருப்பியபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மல்ல பள்ளி ஊராட்சி பனந்தோப்பு பகுதியில் இருந்து சுண்ணாம்பு குட்டை வழியாக தேசிய நெடுஞ்சாலை வரை இனைப்பு தார் சாலை உள்ளது. இந்த வழியாக ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். தற்போது அச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுபதால் அச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர் அடுத்த வளத்தூர் குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 25 வயது தக்க இளைஞர் நேற்று இரவு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் இடையம்ப்பட்டி குடிதெருவை சேர்ந்தவர் அருண்குமார் (22). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் விடுமுறையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு சொந்த ஊருக்கு வந்த அவர் திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் அடிபட்டு உயிரிழந்தார்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இன்று வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக முகநூல் வலைப்பதிவில், அரசு இலவச மடிக்கணினி தொடர்பாக மொபைல் போனில் போலியாக வரும் லிங்கை அழுத்த வேண்டாம். தகவலின் உண்மைத் தன்மை அறியாமல் யாருக்கும் இதுபோன்ற தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும். இதன் மூலம் அதிக மோசடி நடப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் அடுத்த சாமியார்மடம் பகுதியில் உள்ள பழைய துணி கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு முதல் மாடியில் இருந்த தோல் கிடங்கிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு துணி மற்றும் தோல் கிடங்கு உரிமையாளரிடம் ஆறுதல் தெரிவித்து அரசிடம் இருந்து இழப்பீடு பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளார்
நாட்றம்பள்ளி அடுத்த நாயனதெரு அரசு பள்ளியில் நாளை குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர் நாகராஜ் தலைமையில் ஊராட்சி ஊழியர்கள் தேர்வு அறைகள் மற்றும் பள்ளி கழிவறைகள் சுகாதாரமாக வைத்தல் உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.