India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் உரிமையாளர்கள் செல்போன் டவர் அமைந்துள்ள இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.
ஆம்பூர் டவுன் கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் கோதண்டராமன் (28). இவர் நேற்று இரவு டூவிலரில் கதவளத்தில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பாரசனா பள்ளி அருகே சென்ற போது டூவிலர் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புங்க மரத்தில் மோதியது. இதில் கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அமராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாட்றம்பள்ளி தாலுகா
புத்துகோவில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 2 மணியளவில் ஈரோடு பவானி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 9 பெண்கள் உள்பட ஆண் ஒருவருக்கு கால் முறிவைடந்தது. மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அஞ்சல் துறையில் ஓய்வூதியம் பெறும் அஞ்சல், ரயில்வே, தொலைபேசி துறைகளின் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிப்பதற்காக குறைதீர் முகாம் மேற்கு மண்டல அலுவலகத்தில் வரும் ஜுலை 3-ஆம் தேதி காணொலி மூலம் நடைபெற உள்ளது. எனவே, ஓய்வூதியதாரர்கள் நிவர்த்தி செய்ய முடியாத குறைகளை முழு விவரத்துடன் எழுதி திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட அலுவலகத்துக்கு வரும் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
ஆம்பூர் ஊராட்சி ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் ரூ. 22 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியை குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் இன்று தொடங்கி வைத்தாா். மேலும்
மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, மாதனூா் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன், ஆதிதிராவிடா் நலக் குழு அமைப்பாளா் குமாா், போ்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் தலைவா் சா.சங்கா் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று சிறுத்தை இருப்பதை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் வனத்துறையினர் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு பணியினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று சுமார் 3 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் வனத்துறையில் சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். சிறுத்தையின் நடமாட்டம் காரணமாக கார்ஷெட்டில் சிக்கிக் கொண்டிருந்த 5 பேரை வனத்துறையினர், காவல்துறையினர் ,தீயணைப்புத்துறையினர் சுமார் 7 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியில் இன்று மாலை சிறுத்தை நுழைந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஷெட்டில் சிறுத்தை முகாமிட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க கூண்டு வரவழைக்கப்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை முதல் வருகின்ற திங்கட்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் முதியவர் ஒருவர் காயமடைந்தார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேரி இம்மாகுலேட் பள்ளியில் சிறுத்தை ஒன்று இன்று நுழைந்துள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் அதனைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள் பத்திரமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆம்பூர் நகரம் வார்டு 10 இல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் திமுக நகர மன்ற உறுப்பினர் இம்தியாஸ் அஹமத் தலைமையில் ரிங் நோய் தடுப்பு சொட்டு மருந்து 50 குழந்தைகளுக்கு மேல் போடப்பட்டுள்ளது. மேலும் சொட்டு மருந்து தேவைப்படும் குழந்தைகளுக்கு வந்து போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.