India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜவ்வாது மலை சின்னவட்டானூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (20). இவர் ஜவ்வாது மலையில் இருந்து பிக்கப்வேனில் 25 பேரை ஏற்றுக் கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருப்பத்தூர் ஏரி கொடி பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 22 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஜீன்.21 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் பெற்ற அனைவரும் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2024 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், நேரடியாகவும் ஜீன்.20 ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளை ஒருங்கினைத்து வரும் ஜீன்.21 அன்று காலை 10 மணிக்கு
திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருநங்கைகளுக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் பயனடையாத திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100 க்கும் கீழ் பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.96 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 78.80 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைக்கு இன்று சென்னை சூளைமேடு பகுதி சேர்ந்தவர்கள் சுற்றுலா சென்று மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். 12 ஆவது வளைவில் வேன் சென்ற பொது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு வேலியில் மோதியது. இதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர்கள் திருப்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் எம்பி ஆக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள எம்.பி. கதிர் அனந்த் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வருகை தரவுள்ளார். இந்நிலையில் ஆலங்காயம் அடுத்த சத்திரம் பகுதியில் உள்ள சென்றாய சாமி கோவிலில் கதிர் ஆனந்த் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பிராத்தனை செய்தார்.
பள்ளி வளாகத்தில் சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த வந்த கோபால் என்பவருக்கு, அவரது தலையை சுற்றி 28 தையல்கள் போடப்பட்டு, காதில் சிறிது பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இந்நிலையில், காயமடைந்த தன்னை வனத்துறை ஊழியர் ஒருவர் வந்து பார்த்தார். அரசு அதிகாரிகள் யாரும் வரவே இல்லை. எந்தப் பணியும் செய்ய முடியவில்லை எனவும் அரசு தரப்பில் இருந்து தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர், உடையமுத்தூர், கோனேரிகுப்பம், பொம்மியகுப்பம், கொடுமாம்பள்ளி, தண்ணீர்பந்தல் மற்றும் மாடப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவர்களில் உபகரணங்கள் திருடியவர்களை போலீஸ் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் சிசிடிவி கேமரா உதவியுடன் 8 பேரை கைது செய்தனர். 8 பேரை கைது செய்து சிறப்பாக
செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
திருப்பத்தூர், உடையமுத்தூர், கோனேரிகுப்பம், பொம்மியகுப்பம், கொடுமாம்பள்ளி, தண்ணீர்பந்தல் மற்றும் மாடப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவர்களில் உபகரணங்கள் திருடியவர்களை போலீஸ் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் சிசிடிவி கேமரா உதவியுடன் 8 பேரை கைது செய்தனர். 8 பேரை கைது செய்து சிறப்பாக
செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.