India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறை தீர் கூட்டரங்கில் நாளை (ஜூன் 21) காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருநங்கைகள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அடையாள அட்டை காப்பீடு அட்டை ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் பெற திருத்தங்கள் மேற்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் செய்தி எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசவுள்ளார். இந்த நிகழ்வில் அனைத்து செய்தியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.
தம்மனுார் கிராமத்தில் ரம்யா என்பவருக்கு சொந்தமாக 7.5 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலையில், அவரது கணவரின் சகோதரர் பன்னீர்செல்வம் உரிமை கொண்டாடி வேலி அமைத்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் ரம்யாவுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், பன்னீர்செல்வம் வேலியை அகற்றாமல் வைத்துள்ளார். இந்நிலையில் புகார் அளிக்க வந்த ரம்யா தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி, இந்திரா நகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பதாக மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அங்கு சென்ற போலிசார் விநாயகம் ( 38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 17 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடித்து இன்று 10 பேர் உயிரிழந்த நிலையில் 17 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வாணியம்பாடியில் 14 மி.மீட்டர், குறைந்த பட்சமாக ஆம்பூர் 4.20 மி.மீட்டர் மழை பெய்தது பதிவாகியுள்ளது. நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் ஆம்பூர் 4.20 மி.மீ,வடபுதுப்பட்டு 9.40 மி.மீ, காவலூர் 8 மி.மீ, வாணியம்பாடி 14 மி.மீ, திருப்பத்தூர் 8.20 மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு அருகே சந்தப்பன் ஏரிக்கரை பகுதியில் பெருமாபட்டு கிராம நிர்வாக அலுவலர் அறவேந்தன் அளித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் தூயநெஞ்ச கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு முன்னிலையில் நேற்று அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு ஏரிகரையோரம் உள்ள குபேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நிலகொடை தொடர்பான கல்வெட்டினை கண்டுபிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(ஜீன் 19) காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்காமல் மற்றும் திருப்தி பெறாத புகார் மனுதாரர்கள் எஸ்பியை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜான் தெரிவித்துள்ளார்கள்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாளை(ஜீன்.19) காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்காமல் மற்றும் திருப்தி பெறாத புகார் மனுதாரர்கள் எஸ்பியை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜான் தெரிவித்துள்ளார்கள்.
ஏரிக்கரை பகுதியில் இன்று டாட்டா ஏசி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் காயமடைந்த நிலையில் இவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜவ்வாது மலை சின்னவட்டானூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (20). இவர் ஜவ்வாது மலையில் இருந்து பிக்கப்வேனில் 25 பேரை ஏற்றுக் கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருப்பத்தூர் ஏரி கொடி பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 22 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.