India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை ஆட்சியர் வழங்கினார். இனி வாரத்திற்கு ஒரு முறை போதை பொருட்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை 10.30 மணியளவில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை 11 மணியளவில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மற்றும் பல்வேறு ஆவணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் வழங்கினார். உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் முடிந்த நிலையில், வாணியம்பாடி தாலுகா அம்பலூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் மோகன் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதுநிலை ஆய்வாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் புஷ்பலதா அம்பலூர் வருவாய் ஆய்வாளராக பணி மாற்றம் செய்து வருவாய் அலுவலர் நாராயணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கென்னடி குப்பத்தை சேர்ந்தவர் முருகேசன் (79). இவருக்கு காது கேட்காது. இந்நிலையில் இன்று விண்ணமங்கலம் அருகே தண்ணீர் எடுக்க தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது போடிநாயக்கனூர்-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரிக்கின்றனர்.
நாட்றம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளான அதிபெரமனூர், புதுப்பேட்டை, கேத்தாண்டப்பட்டி, கொத்தூர், பச்சூர் வெலக்க்கல்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த கனமழையால் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே டிரான்ஸ்பார்மர் வெடித்தது. தகவல் அறிந்த மின் ஊழியர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மரை சரி செய்தனர்.
இந்திய விமானப்படையின் அக்னிவீர் தேர்வு அக்டோபர் 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக ஜூலை 8 முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 28ஆம் தேதி வரை இத்தேர்வுக்கு 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். +2 மற்றும் அதற்கு இணையான 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் அக்னிவீர்வாயு தேர்வு அக்டோபர் 18 முதல் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு இணையத்தளம் வாயிலாக ஜூலை 8 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு 03.07.2004, 03.01.2008 வரை பிறந்த ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம். இதற்கு 12 ஆம் வகுப்பிற்கு இணையான கல்வித்தகுதியுடன் மொத்த மதிப்பீடாக குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டப் பொருட்களை பெறும் குடும்ப அட்டைதாரர்களில் மே மாதம் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் இம்மாதம் ஜீன் 30 வரை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத்திட்ட அலுவலர்கள் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கு முறையாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் சென்றடைந்ததை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலியான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் குறித்து மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் அளிக்க 24/7 Help Line No 91599 59919 என்ற எண் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தகவல் கொடுப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட எஸ் பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.