Tirupathur

News June 24, 2024

திருப்பத்தூர்: 100 பேர் மீது பாய்ந்த வழக்கு

image

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட பாஜக சார்பில் நேற்று முன்தினம் பாஜக அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், விஏஓ சிலம்பரசன் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் போலீசார் ஆர்ப்பாட்டம் செய்த 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

News June 23, 2024

திருப்பத்தூர்: நகராட்சி சார்பில் 2.0 தூய்மை பணி

image

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் நகரத்தை தூய்மையாக வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சிவராஜ் பேட்டை, சக்தி நகர், கலைஞர் நகர் ,அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் இன்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின் போது நகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

News June 23, 2024

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

ஏலகிரி மலையில் வார விடுமுறையை முன்னிட்டு இன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இப்பகுதியில், மிதமான குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரத் தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வியாபாரமும் படுஜோராக நடப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 23, 2024

ஆம்பூர்: அசைவ உணவகத்தில் ரகளை

image

ஆம்பூர் தாலுகா சோமலாபுரம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு அதே பகுதியை  மகேஷ் (32) என்பவர் அசைவ உணவு ஹோட்டல் நடத்தி வருகிறார். கடையில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில்,  அதே பகுதியை சேர்ந்த சரவணன், விக்னேஷ் ஆகிய இருவர் இந்த கடையில் பீப் பிரியாணி விற்பதாக கூறி அவரிடம் ரகளையில் ஈடுபட்டனர். 

News June 23, 2024

வெள்ளாளனூர் சுடுகாடு ஆக்கிரமிப்பு

image

நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளாளனூர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சுடுகாடு மற்றும் ஆக்கிரமிப்பு இடத்தை ஆட்சியா் தா்ப்பகராஜ் நேற்று ஆய்வு செய்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளாளனூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான மந்தைவெளி புறம்போக்கு சுடுகாட்டைஅதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்படி ஆட்சியர் ஆய்வு செய்தார். 

News June 22, 2024

திருப்பத்தூர் : போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ள சாராயம் ஒழிப்பு குறித்த கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

News June 22, 2024

திருப்பத்தூரில் டாஸ்மாக் கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு

image

திருப்பத்தூர் பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ள 2 டாஸ்மாக் கடைகளில் இன்று மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் திடீர் ஆய்வு செய்தார். இதில், மது பாட்டில்கள் சரியான விலைக்கு விற்கப்படுகிறதா எனவும், கடையின் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகரன், உதவி ஆணையர் கலால் அமுதன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

News June 22, 2024

திருப்பத்தூரில் நாளை மருத்துவ முகாம்

image

திருப்பத்தூர் தங்கம்மா மருத்துவமனையில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை திருப்பத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் மலர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் 30% பரிசோதனை சலுகை வழங்கப்படுகிறது. இதில், ஏழை எளிய பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மருத்துவர் வினோதினி தெரிவித்துள்ளார்.

News June 22, 2024

திருப்பத்தூரில் ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை ஆட்சியர் வழங்கினார். இனி வாரத்திற்கு ஒரு முறை போதை பொருட்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

News June 22, 2024

திருப்பத்தூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை 10.30 மணியளவில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தியுள்ளார். 

error: Content is protected !!