India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் ஆம்பூர் தாலுகா டவுன், வாணியம்பாடி தாலுகா டவுன், திருப்பத்தூர் தாலுகா டவுன், கந்திலி, உமராபாத், நாட்றம்பள்ளி ஆலங்காயம் உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு சட்டம் ஓழுக்கு படுத்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மேலுள்ள புகைப்படத்தில் உள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது? COMMENT பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் வருகிறது. இதனையடுத்து, நேற்று தீபாவளி பண்டிகையுடன் தொடர் 4 நாட்கள் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்று சென்னையில் இருந்து சேலம் நோக்கி செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் தீவிர சோதனை செய்தனர். அப்போது கழிவறை அருகே கேட்பாரற்ற கிடந்த பையை சோதனை செய்த போது 15 கிலோ கஞ்சா இருப்பது கண்டு விசாரணை செய்தபோது யாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து போலிசார் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர் நகரம், கிராமிய காவல்நிலையங்கள் மற்றும் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (31.10.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் காவல்துறையை தொடர்புகொள்ளலாம்.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட திருப்பத்தூர் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர் நகரம், கிராமிய காவல்நிலையங்கள், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (30.10.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ள காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் அலுவலகத்திலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தீபாவளி பண்டிகை முடியும் வரை தொடர்ந்து 3 நாட்களாக ரயில்வே போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என சோதனையிடுவதோடு, ரயில் நிலைய முகப்பிலேயே பயணிகளின் உடமைகளை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பட்டாசுகளை எடுத்து சென்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.