India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூரை சேர்ந்த திலீப் இளைஞர் ஒருவர் சிறிய சைக்கிளில் தலைக்கவசத்தை அணிந்து கொண்டு சைக்கிளை ஓட்டி சென்றார். இதனை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஒருபுறம் நகைப்புக்குரியதாக இருந்தாலும் பலரும் வியப்புடன் பார்த்து ரசித்தனர். மேலும், ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக திலீப் தெரிவித்தார்.
வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் அண்ணாமலை, நேற்று இரவு நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து வாணியம்பாடி நோக்கி பைக்கில் தனது நண்பர் சபரியுடன் சென்றார். அப்போது, நாட்றம்பள்ளி ஏழரைப்பட்டி அருகே பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர். சிகிச்சை பெற்று வந்த போலீஸ் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூரில் நேற்று (ஏப்.28) 106.52 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி திருப்பத்தூர் மாவட்ட நீதித்துறையில் 53 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க<
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜோலார்பேட்டை அரசு மினி ஸ்டேடியத்தில் ரூ. 200 கட்டணத்தில் இன்று முதல் மே.13 ஆம் தேதி வரை கோடை கால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் தடகளம்,கபடி,கூடைப்பந்து,கால்பந்து மற்றும் கையுந்து விளையாட்டிற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 7401703463 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 9,600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருந்த 155 குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மனம் திருந்தி நன்னடத்தையுடன் வாழ்க்கை நடத்தும் குற்றவாளிகளுக்கு அரசின் நிதியுதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிவித்துள்ளார்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலை எப்பொழுதும் சம சீதோஷ்ண நிலை இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நதியா கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவில் உள்ள டேராடூன் பகுதியை சார்ந்து கல்வி சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையறிந்த கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நேற்று நள்ளிரவில் சென்னை – பெங்களூர் சாலையில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பிரதாப் (21) என்பவர் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு கம்பியின் மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்.28) அதிகாலை உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.