Tirupathur

News November 19, 2024

திருப்பத்தூரில் ரேஷன் கடை விற்பனையாளர் நேர்முக தேர்வு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு வருகிற 25-ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் நேர்முக தேர்வு பொதிகை கல்லூரியில் நடைபெறுகிறது. நேர்முக தேர்வில் பங்கேற்க அனுமதி சீட்டு, கல்வி தகுதி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும் என கூட்டுறவு துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

News November 19, 2024

திருப்பத்தூரில் கிராமசபை கூட்டம் 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 208  ஊராட்சிகளிலும் வருகின்ற 23.11.2024 சனிக்கிழமை காலை 11 மணியளவில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் அனைத்து கிராம சபை கூட்டத்திலும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார். 

News November 19, 2024

கள்ளச்சாராயம் விற்றவர்கள் மனம் திருந்தி ஆட்சியரிடம் மனு

image

திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆம்பூர்,  ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 170 நபர்கள் மனம் திருந்தி இனிமேல் கள்ள சாராயம் விற்பனை ஈடுபட மாட்டோம் எனவும், தங்கள் வாழ்வாதாரம் மேம்பட கறவை மாடுகள் வழங்க வேண்டும் எனவும் நேற்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

News November 18, 2024

இரவு ரோந்து காவலர்களின் விவரம் 2/2

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது. திம்மாம்பேட்டை, அம்பலூர், நாட்டாரம்பள்ளி, கந்திலி, ஜோலார்பேட்டை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் கொடுக்கப்பட்டு உள்ளது. 

News November 18, 2024

இன்றைய ரோந்து பணி காவலர்கள் விவரம் 1/2

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (நவ.18) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் அளிக்கலாம்.

News November 18, 2024

புத்தக திருவிழாவில் பிரபல பேச்சாளர் பர்வீன் சுல்தானா

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 2 ஆவது புத்தக திருவிழா கடந்த சில தினங்களாக நடைப்பெற்று வரும் நிலையில், இன்று (18.11.2024) பேராசிரியரும், பேச்சாளருமான பர்வீன் சுல்தானா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ‘ஒளிரும் அறிவு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

News November 18, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியானவர்கள் இந்த உதவித் தொகை பெற தகுதியானவர்கள் என்றும், கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News November 18, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பெண் மாவட்ட செயலாளர்

image

திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பெண் மாவட்ட செயலாளராக எஸ் டி சங்கரியை தேர்வு செய்து மாநில பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கட்சியினர் ,மாவட்ட செயலாளர் எஸ். டி.சங்கரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News November 18, 2024

ஆம்பூரில் நடைபெற்ற 108 வலம்புரி சங்காபிஷேகம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உள்ள சமயவல்லி அம்பாள் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் முன்னிட்டு இன்று (18.11.2024) மூலவர் நாகநாதசுவாமிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் யாக கலச பூஜையுடன் நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

News November 18, 2024

வேளாண்மைப் பொருட்களை காப்பீடு செய்ய அறிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை துறையின் திருப்பத்தூர் மாவட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாய பகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேளாண்மைப் பொருட்களை காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் நெற்பயிர்களை காப்பீடு செய்ய ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், விரைந்து காப்பீடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.