Tirunelveli

News November 12, 2024

நெல்லை வரும் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு

image

சுற்றுலாத்துறை அமைச்சரும், சேலம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சேலம் ராஜேந்திரன் நாளை(நவ.,13) டவுன் நயினார் குளம், மிதவை ஓட்டல் பணி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஆய்வு செய்வதற்காக நெல்லை வருகை தருகிறார். இதை தொடர்ந்து இன்று இரவு 8 மணியளவில் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகை வரும் அமைச்சருக்கு மத்திய மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

News November 12, 2024

திருநெல்வேலியில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்!

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(நவ.,12), # காலை 10 மணிக்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலையருகே மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. # காலை 10:30 மணிக்குதிருநெல்வேலி மாநகராட்சி பிரதான அலுவலக மையக் கட்டடத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

News November 11, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருநெல்வேலி புறநகர் மாவட்ட பகுதிகளில் இரவில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு சிறப்பு அதிகாரியாக அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் இன்று இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

News November 11, 2024

நெல்லைக்கு எஸ்பி வேலுமணி நியமனம்

image

அதிமுகவில் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ள மூத்த நிர்வாகிகளை கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி அருணாச்சலம் ஆகிய இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் முன்னேற்றம் குறிக்கும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

News November 11, 2024

வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளை அதிகரிக்க கோரி தீர்மானம்

image

நெல்லை மாவட்ட ரயில் பயணிகள் சங்க கமிட்டி கூட்டம் ஏர்வாடியில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் கலீல் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் தினேஷ் முன்னிலை வகித்தார்.பொருளாளர் முத்துவாப்பா வரவேற்ரையாற்றினார்.இந்த கூட்டத்தில் தென் மாவட்ட மக்கள் நலன் கருதி கோவை நெல்லை இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்குவது,சென்னை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளை அதிகரிப்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

News November 11, 2024

மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி

image

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவி சுற்றுலாப் பயணிகளின் முக்கிய மையமாக உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் அதிக அளவில் மக்கள் வந்து குளிக்கின்றனர். இதனிடையே கடந்த 10 நாட்களாக அருவியில் நீர்வரத்து மிக அதிகமாக இருந்தது. இதன் காரணமாக இந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். கடந்த 2 நாளாக மழை பெய்யாத நிலையில் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2024

மும்பை செல்லும் ரயிலில் பெட்டிகள் குறைப்பு

image

மும்பையில் இருந்து தென் தமிழகத்திற்கு வாரத்தில் ஆறு நாட்கள் மும்பை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை 4 மாநில மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயிலில் தற்போது 9 சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகள், 5 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் உள்ளிட்ட இறுதி பெட்டிகள் உள்ளன. வரும் 14ஆம் தேதி முதல் இந்த ரயிலில் இரண்டு மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் குறைக்கப்படுகின்றன.

News November 11, 2024

நெல்லை வழியாக ஈரோடு வரை மீண்டும் பயணிகள் ரயில் சேவை!

image

செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி, நெல்லை, மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், மதுரை வழியாக ஈரோடு வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் பராமரிப்பு காரணமாக சில வாரங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் தற்போது மீண்டும் இயங்க தொடங்கியுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. SHARE IT.

News November 11, 2024

மகளிர் ஹாக்கி: அரை இறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்

image

பாளையங்கோட்டையில் 3 மைதானங்களில் மாநில மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது 2 ஆம் நாளான நேற்று(நவ.,10) கால் இறுதி போட்டிகள் நடைபெற்றன. பரபரப்பாக நடைபெற்ற போட்டிகளில் திருவண்ணாமலை, ஈரோடு, புதுக்கோட்டை, வேலூர் வேலூர், அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. பெற்றன இன்று(நவ.,11) இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் மற்றும் விழா

News November 11, 2024

மூலக்கரைபட்டியில் போலீசாரை தாக்கிய அண்ணன் – தம்பி கைது

image

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி பிள்ளையார் குளத்தை சேர்ந்த சுடலையாண்டி மகன்கள் சொத்து பிரச்னைக்காக நேற்று முன்தினம் இரவு சண்டையிட்டுக் கொண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, கிளின்டன்(29), மணிகண்டன்(28) சேர்ந்து விசாரணைக்கு வந்த SI மற்றும் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று(நவ.,10) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.