India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாநகராட்சியில் பணியாற்றும் சுய உதவிக் குழு தூய்மை பணியாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் வைரலாக்கி வருகின்றனர்.
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க நாள்தோறும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் காவல் உதவிக்கு இவர்களை அணுகலாம்.
நெல்லை காவல் சரக டிஐஜி அலுவலகத்தில் இன்று (நவ.12) டிஐஜி மூர்த்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்ட எஸ்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்த காவலர்கள் மற்றும் அதிகாரிகளை டிஐஜி மூர்த்தி பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலி – சென்னை, சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் [T.NO.20665/ 20666] பெட்டிகளின் எண்ணிக்கையை 8 லிருந்து 16 ஆக உயர்த்திட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சென்னை தென்னக ரயில்வே போக்குவரத்து பிரிவு வர்த்தக துணை மேலாளர் பிரபாகர் குணசீல பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இளங்கலை பொறியியல் மற்றும் தொழிற்கல்வி படித்து முடித்த மகளிர்கள் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக சேர்ந்து அரசு ஒப்பந்தப் பணியினை செய்வதற்கு விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (நவ.12) தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் விகேபுரத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கு வேட்டையன் திரைப்படம் ஒளி பரப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அதிரடி விசாரணை நடத்தினார். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக திரையிடப்பட்டதாக தலைமை ஆசிரியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் வி.கே. புரத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் சினிமா திரையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் பள்ளி கல்விதுறை விசாரணை நடத்துகின்றன. நடிகர் விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தை மாணவர்களிடம் ரூ.25 கட்டணம் பெற்று ஒளிபரப்பியது என இந்துமுன்னணி குற்றச்சாட்டியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில் நடைபெற்ற 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் அங்குள்ள முக்கிய நகரங்களில் தமிழர்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்களை சந்தித்து வந்தவர், நேற்று அவர் குயின்ஸ்லாந்து மாகாணம் கேய்ரின்ஸ் பிராந்திய கவுன்சில் மேயர் ஆமி ஈடனை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையானார்.
தேமுதிக திருநெல்வேலி புறநகர் மாவட்டம் மீனவர் அணி நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம் பரிந்துரையின்பேரில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று(நவ.,11) நியமனம் செய்துள்ளார். மாவட்ட செயலாளராக கவின், துணை செயலாளர்களாக ஜெய், அந்தோணி, பிச்சை, ஜேசுராஜ் ஆகியோருக்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கிடவும் பிரேமலதா கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் பெண் கலெக்டராக சிறப்பாக பணியாற்றி மக்களின் ஆதரவு பெற்றவர் ஷில்பா பிரபாகர் சதீஷ். இவர் தமிழக அரசின் சுற்றுலாத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவு நேற்று தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய துறை பொறுப்பேற்க இருக்கும் அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.