Tirunelveli

News April 2, 2025

குளத்தில் குளித்த +2 மாணவர் நீரில் மூழ்கி பலி

image

செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் திவாகர் (வயது-17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள குளத்திற்கு இன்று நண்பர்களுடன் காலை குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார். நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2025

நெல்லைக்கு கன மழை எச்சரிக்கை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (ஏப்.4) அன்று நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*

News April 2, 2025

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை கொடியேற்றம்

image

களக்காட்டில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 11 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறுகிறது. இதில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், இரவில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.

News April 2, 2025

நெல்லையில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பெண்களுக்கான 35 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 60 வயதிற்குட்பட்ட பெண்கள் ஏப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 2, 2025

நாங்குநேரி தொழில்பேட்டை விரைவில் உருவாகும்

image

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நாங்குநேரி எம்எல்ஏ பேசுகையில் நாங்குநேரி தொழிற்பேட்டை எப்போது அமையும் என கேட்டார். அதற்கு அமைச்சர் ராஜா நாங்குநேரி தொழில்பேட்டை பிரச்சனைகள் வெகு விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் டிட்கோ நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சட்ட சிக்கல்கள் எல்லாம் நீக்கப்பட்டு நிச்சயமாக அங்கு தொழில்பேட்டை உருவாகும் என்றார்.

News April 2, 2025

நெல்லையில் கல்குவாரி குட்டையில் மூழ்கி ஒருவர் பலி

image

கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதியை சேர்ந்தவர் ராமையா (55). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கிய தண்ணீரில் நேற்று குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2025

21 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு கடைகளில் சோதனை செய்தனர். அதில் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதில் 21 நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே வியாபாரிகள் காலாவாதியான பொருட்கள் விற்கக் கூடாது என நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.1] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News April 1, 2025

நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

image

பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொதுதேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து நெல்லை ஆட்சியர் சுகுமார் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு மாற்றாக ஏப்ரல் 26-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க*

News April 1, 2025

அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

image

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் & அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க செல்போன் அல்லது வாட்ஸ் அப் “வணக்கம் நெல்லை” என்னும் செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 97865 66111 எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தீர்வு பெறலாம் என கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!