India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று(நவ.15) காலை 09.30 மணிக்கு பாளையங்கோட்டை விக்னேஷ் கான்வென்ட் பள்ளியில் கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள குழந்தைகள் மையத்தில் தாய்மார்களுக்கு குழந்தைகள் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெறுகிறது.
இணை இரயில் வருகை தாமதம் காரணமாக சென்னை – நெல்லை சிறப்பு ரயில் இன்று(நவ.15) ரத்து செய்யப்படுகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை நெல்லை சிறப்பு ரயில் எண்-06069 முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே இந்த ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பயணத்திற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டரங்கில் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற கோரிக்கை மனு அளிக்கலாம். நலத்திட்டங்கள் பெற தேசிய அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது .அதன்படி இன்று மாலை நான்கு மணி நிலவரப்படி அம்பையில் 3 மிமீ, மணிமுத்தாறு 5.60 மிமீ, பாளையம் கோட்டையில் 3.40 மிமீ, பாபநாசத்தில் 3 மிமீ, திருநெல்வேலியில் 6 மிமீ என மொத்தம் மாவட்டத்தில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது .
நெல்லையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் மாணவர்களுக்கு 2 பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில் சக மாணவர்களிடமும் உங்கள் ஆசிரியர்களிடமும் அன்பை விதையுங்கள், போதைப் பொருள்களுக்கு வாழ்க்கையை அழித்துக்கொள்ளாதீர் என அறிவுரைகள் கடிதத்தில் இடம்பெற்றுள்ளன. நெல்லையில் 10, 11, 12ஆம் வகுப்பைச் சேர்ந்த 66,000 மாணவர்களுக்கும் இந்தக் கடிதம் இன்று நேரடியாக வழங்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையில் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு நிர்வாகிகளோடு கலந்துரையாடினார். அப்போது நிர்வாகிகளுக்கும் சீமானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிர்வாகிகளை கடுமையான வார்த்தைகளால் சீமான் பேசியதால் 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது போல பல்வேறு பகுதியில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதன் காரணமாக மணிமுத்தாறு அணையில் 28 மில்லி மீட்டர், பாபநாசத்தில் 7 மில்லி மீட்டர், சேர்வலாறு அணை பகுதியில் 21 மில்லி மீட்டர், கொடுமுடியாறு அணையில் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று(நவ.14) மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#இன்று(நவ.,14) காலை 9 மணிக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். #இன்று காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மழைக்கால காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்திப்பு நந்தூரி ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்.
மேலப்பாட்டம் விலக்கு பகுதியில் அக்.,16 ஆம் தேதி ஆயுதங்கள் இருந்ததாக கண்ணபிரான் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கடலூர் மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட கண்ணபிரான் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இம்மாதம் நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க கடந்த 2ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் வழியாக, ஆஸ்திரேலியா நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தமிழக சபாநாயகர் மு.அப்பாவு சென்றார். இந்நிலையில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, இம்மாதம் 18ஆம் தேதி அப்பாவு தாயகம் திரும்புவதாக நேற்று(நவ.,13) தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.