India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு சந்திப்பில் இஸ்ரோ நுழைவு வாயில் அருகே நான்கு வழிச்சாலையில் ஆம்னி பேருந்தின் பின்னால் லாரி மோதியது. இதில் லாரி டிரைவர் காயமடைந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து அணுகுசாலையில் மாற்றி விடப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சங்கீதா சின்னராணி பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பிறப்பித்துள்ளார். இதுபோல் தமிழக முழுவதும் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமை செயலகம் மற்றும் நிதி பிரிவில் காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 32 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <

களக்காடு கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடன் கொடுக்கல் வாங்கல் சம்பவத்தில் வழிமறித்து தவசிக்கனி என்பவர் அறிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நாங்குநேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தவசிக்கனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர், தனது துறை பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கல்லூரி நிர்வாகம் அவருக்கு துணை போவதாகவும் மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகர போலீஸ் எஸ்ஐ செல்வம் மருத்துவ காப்பீட்டுக்கு பணம் செலுத்தி வருகிறார். இவர் கால் அறுவை சிகிச்சைக்காக ரூ.2,03,873 செலவு செய்தும் காப்பீட்டு நிறுவனம் ரூ.51,580 மட்டுமே வழங்கியது. மன உளைச்சலில் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில் நஷ்ட ஈடு ரூ.30,000 மற்றும் மீதமுள்ள காப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.2,62,762 வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள சக்தி குளம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சிலர் குளித்த போது ஆற்றில் 3 ஐம்பொன் சிலைகள் கிடந்ததை பார்த்து அவற்றை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு கொடுத்த தகவல் கொடுத்தனர். அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் இதுக்குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<

சிங்கிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த வானுமாமலையை கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளில் களக்காடு போலீசாரும், வீரநல்லூர் கிளாக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து என்ற கட்ட இசக்கியை (42) கொலை முயற்சி மிரட்டல் வழக்குகளிலும் வீரவநல்லூர் போலீசாரும் கைது செய்தனர். போலீசார் வானுமாமாலை, இசக்கிமுத்துவை ஆட்சியரின் உத்தரவின் படி நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாநகர் மேலப்பாளையம் போலீஸ் உதவி கமிஷனர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் நெல்லை மாநகர மனித உரிமை கமிஷன் பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் நிக்சன் வேளாங்கண்ணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி வெங்கட்ராமன் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
Sorry, no posts matched your criteria.