Tirunelveli

News March 19, 2024

காங்கிரஸ் நெல்லை வேட்பாளராக மீண்டும் ராமசுப்பு?

image

பாராளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலைவர்கள் திருநெல்வேலி தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்படும் இன்று எதிர்பார்ப்பில் உள்ளனர் எனினும் முன்னாள் எம்பி ராமசுப்புவுக்கு தான் மீண்டும் சீட் கிடைக்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

News March 19, 2024

நெல்லை: ராமர் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளல்

image

பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (மார்ச் 18) 3ஆம் திருநாள் விழாவை முன்னிட்டு இரவு ஸ்ரீராமர் அலங்காரத்துடன் அனுமன் வாகனத்தில் ராஜகோபால சுவாமி பெருமாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

News March 18, 2024

நெல்லைக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமி

image

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இந்த நிலையில் வருகின்ற 26 ஆம் தேதி இரவு 7 மணிக்கு டவுன் வாகையடிமுனையில் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாட்டை நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

News March 18, 2024

திருநெல்வேலியில் நாங்குநேரி எம்எல்ஏ போட்டியா?

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக இன்று (மார்ச் 18) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

News March 18, 2024

வேட்பு மனுவை முதல் ஆளாக பெற்றுச் சென்ற நாம் தமிழர் 

image

பாராளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இந்த மாதம் 20-ம் தேதி துவங்குகிறது. வேட்புமனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 18) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா இன்று முதன் முதலாக வேட்பு மனுவை அதிகாரிகளிடம் வாங்கி சென்றார்.

News March 18, 2024

திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் போட்டி 

image

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் ஞானதிரவியம் வெற்றிபெற்றார்.

News March 18, 2024

திருநெல்வேலியில் தமிழிசை போட்டி?

image

புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு கனிமொழியிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2024

நெல்லை: அரசியல் கட்சிகளே உஷார்

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் ஊடகங்களில் வரும் செய்திகள் கண்காணிக்கப்படுகிறது. இந்த செய்திகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் மீது புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

News March 18, 2024

நெல்லை மாவட்ட காவல்துறை முக்கிய அறிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று மாலை விடுத்துள்ள அறிவிப்பில், தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் குறுஞ்செய்திகள் வழியாகவோ சமூக ஊடகங்கள் வழியாகவோ பரப்பினால் 24 மணி நேரமும் செயல்படும் காவல்துறை கைபேசி எண் 9498101765 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

News March 17, 2024

தேர்தல் ஆணையத்திற்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

image

பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், 19, 26 தேதிகள் வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்று இஸ்லாமியர்கள் ஜும்மா தொழுகை மேற்கொள்வார்கள். எனவே அன்றைய தேதியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!