India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வருகிற 25ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக 40 ஏக்கரில் பிரமாண்டமாக விழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார் ஆகியோர் நேற்று (மார்ச் 21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நெல்லை தொகுதியில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியான நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங். வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் மகன் அசோக் ரூபி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் உத்தேச பட்டியலில் பீட்டர் அல்போன்ஸ் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்ட வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு இன்று (மார்ச் 22) அதிகாலை பல இடங்களில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 65.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மணிமுத்தாறு அருகே உள்ள நாலு முக்கு 36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாங்குநேரியில் 9.60 mm, சேர்வலாறு அணை எட்டு மில்லி மீட்டர் மழை பெய்தது.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரை நேற்று (மார்ச் 21) இரவில் அவரது இல்லத்தில் வைத்து பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் தொண்டர்களை சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தில் இன்று (மார்ச் 22) காலை 10 மணிக்கு நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம். எனவே அதற்கு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருநெல்வேலி மாநகர பகுதியில் போலீசார் இரவு நேர வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று (மார்ச் 21) நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் வாகனங்களை நிறுத்தி தேர்தல் விதிமீறல்கள் உள்ளனவா என சோதனை செய்தனர். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பங்குனி உத்திர திருவிழா வருகின்ற 25ஆம் தேதி நெல்லையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் வருகின்ற 25 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 21) அறிவித்துள்ளார். மேலும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் நடைபெறும் என்றும், தேர்வு நடைபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. இந்தப்பட்டியலில் மொத்தம் 9 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், நெல்லை தொகுதி வேட்பாளராக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் இந்த தொகுதியில் போட்டியிடுவதால், காங்கிரஸ் vs பாஜக என களம் சூடுபிடித்துள்ளது.

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனும் போட்டியிடுவதற்காக தங்கள் கட்சியிடம் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஒருவேளை இவர்களுக்கு சீட் வழங்கபட்டு ஒருவர் வெற்றிபெறும் பட்சத்தில் வெற்றிப்பெற்றவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கூடும். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மார்ச் 21) விடுத்துள்ள அறிவிப்பில், நெல்லை தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளை (மார்ச் 22) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். உவரி, குலசேகரப்பட்டினம், பெரியதாழை ஆகிய இடங்களில் நாளை அதிகாலை கன மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.