India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலியில் திமுக போட்டியிட இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளரை தேர்வுசெய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டு முடிவு எட்ட முடியாமல் அக்கட்சியினர் திணறி வருகின்றனர். இதனால் இன்று (மார்ச் 25) மாலைக்குள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்கவில்லை எனில் திமுக தனது வேட்பாளரை தன்னிச்சையாக அறிவிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கே பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் இன்று (மார்ச் 25) தனது ஆதரவாளர்களுடன் வேட்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் பாஜக, ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரான எம்எல்ஏ நயினார் மகேந்திரன் இன்று (மார்ச் 25) பகல் 12 மணிக்கு தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்கிறார், இதில் பாஜக கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை (மார்ச் 27) மாலை 6 மணிக்கு டவுன் வாகையடி முக்கில் நெல்லை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மற்றும் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரி நான்கு வழிச்சாலை அருகே நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் இன்று (மார்ச் 24) மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் சந்திப்பு பகுதியில் ரெட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக அநேக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன இந்நிலையில் நெல்லை வழியாக செல்லும் நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 25) முதல் வரும் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று இரவில் தெரிவித்துள்ளது.

கடந்த 10 மாதத்துக்கு முன்பு பிறந்த குழந்தை வசந்தியை பெற்றோர் வளர்க்க விருப்பம் இல்லாமல் குழந்தை நலக்குழுவில் ஒப்படைத்தனர். குழந்தை தொடர்பாக யாரேனும் உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொக்கிரகுளம் திருநெல்வேலி என்ற முகவரியில் 30 நாட்களுக்குள் அணுகும்படி மாவட்ட ஆட்சியர் நேற்று (மார்ச் 24) தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் அனிதா. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் வலதி என்பவர் 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்தார். இதைக் கேட்டபோது அனிதாவை அவதூறாக பேசி மிரட்டினார். இதுகுறித்து அனிதா அளித்த புகாரின்படி தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வலதியை நேற்று (மார்ச் 24) கைது செய்தார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழ முன்னீர் பள்ளம் புது கிராமம் அருகே தாமிரபரணி ஆற்றில் அருகில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி விட்டதாக பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் இன்று (மார்ச் 24) வந்துள்ளது. இந்த தகவலின்பேரில் பாளையங்கோட்டை மீட்பு படையினர் விரைந்து சென்று சிறுவனை உடலை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தேடி மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.