Tirunelveli

News April 3, 2024

அதிமுக மாநகரச் செயலாளர் அழைப்பு

image

நெல்லை அதிமுக மாநகர செயலாளர் தச்சை கணேசராஜா இன்று (ஏப். 03) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை பி.எஸ்.எஸ் திரையரங்கம் அருகில் தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

News April 3, 2024

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறங்கிய பட்டியல்

image

நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் அச்சடிக்கப்பட்ட பட்டியல் இன்று (ஏப்ரல் 3) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது. இதனை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மிகுந்த பாதுகாப்புடன் ஆட்சியர் அலுவலகத்தில் இறக்கிவைத்தனர்.

News April 3, 2024

வெயில் கொளுத்துவதால் காலையில் பிரச்சாரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் கொளுத்துவதால் வேட்பாளர்கள் பகல் நேரங்களில் பிரச்சாரம் செய்ய சிரமப்படுகின்றனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் இன்று (ஏப்ரல் 3) காலை 6 மணிக்கு தனது அலுவலகத்தில் இருந்து பிரச்சாரத்திற்கு புறப்பட்டார். காலை 7 மணி முதல் திருநெல்வேலி சந்திப்பு, சிந்து பூந்துறை, மேகலிங்கபுரம், உடையார்பட்டி, தாழையூத்து பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

News April 3, 2024

பாஜக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

image

பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 3) காலை 8 மணி முதல் ராதாபுரம் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். நவ்வலடி கிராமத்தில் மலர்த்தூவி, ஆரத்தி எடுத்து அவருக்கு நெற்றியில் திலகமிட்டும் பெண்கள் வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

நெல்லையில் இன்று வெயில் கொளுத்தும்

image

திருநெல்வேலி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (ஏப்ரல் 3) விடுத்துள்ள அறிக்கை: நெல்லையில் வெயில் கொளுத்தும்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 100°F வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும் எனக் கூறியுள்ளார்.

News April 3, 2024

வேட்பாளர் குறித்து நெல்லையில் பரபரப்பு போஸ்டர்

image

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கன்னியாகுமரியை சேர்ந்த ராபர்ட் புரூஸ் என்பவர் போட்டியிடுகிறார். மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை கடைகள் கட்டி விற்பனை செய்த CSI நிர்வாகிகளுக்கு உடந்தையாக இருந்த சிஎஸ்ஐ முன்னாள் பொருளாளர் மற்றும் நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என பரபரப்பு போஸ்டர் இன்று ஒட்டப்பட்டுள்ளது.

News April 3, 2024

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் புகார்களுக்கு தீர்வு

image

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை நேற்றைய (ஏப்.2) நிலவரப்படி 18 புகார்கள் கட்டணமில்லா தொலைபேசி மூலம் பெறப்பட்டுள்ளது.
இதில் நெல்லை தொகுதியில் 9 புகார்களும், அம்பை நாங்குநேரி தொகுதியில் தலா ஒரு புகாரும், பாளை தொகுதியில் 5 புகார்களும் தெரிவிக்கப்பட்டு மொத்தம் 17 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சிவிஜில் செயலின் மூலம் 90 புகார்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன.

News April 3, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் இன்று (ஏப்.3) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்களில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 3, 2024

நெல்லை: சிசிடிவி கேமரா திருடியவர் கைது

image

திசையன்விளை அருகே உள்ள பட்டரைகட்டிவிளையைச் சேர்ந்தவர் சேர்மதுரை. இவரது வீட்டில் பொருத்தி இருந்து சிசிடிவி கேமரா திருடுபோனது. இது குறித்து இவர் அளித்த புகாரின்படி திசையன்விளை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சேர்மதுரையின் சகோதரர் மகாராஜன் (40) என்பவரை நேற்று (ஏப்ரல் 2) கைது செய்தார்.

News April 2, 2024

அதிமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யும் நடிகர்

image

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சிராணி போட்டியிடுகிறார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு இன்று (ஏப்.2) மாலை பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நடிகர் சிங்கமுத்து நெல்லைக்கு வருகை தருகிறார்‌. அவரை நெல்லை அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் வரவேற்க உள்ளனர்.

error: Content is protected !!