India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (ஏப். 4) கூறியதாவது, ஓட்டுப்பதிவு அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த அனைத்து பணிகளையும் மைக்ரோ அப்சர்வர்கள் கண்காணிக்க வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் அரசியல் கட்சியினர் ஏதாவது பிரச்சனைகளை செய்தால் உடனடியாக தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும். இவர்களுக்கு மீண்டும் ஏப்ரல் 18ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்றார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி குழு அனுமதியுடன் முதுகலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு எண் ஆகிய இணைய வழி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பிரத்தியேக அலுவலகத்தை பதிவாளர் சந்திரசேகர் குத்து விளக்கு ஏற்றி இன்று (ஏப்ரல் 4) திறந்து வைத்தார்.

100% வாக்களிக்க வேண்டி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறிப்பாக என் வாக்கு என் உரிமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பிரபல தனியார் தொலைக்காட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 4) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்.4) அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது நயினார் நாகேந்திரனிடம் அப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் மீது நான் வெற்றிபெற்றால் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வேன் என வேட்பாளர் நயினார் இளைஞர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் இன்று (ஏப்.4) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியே இயக்கப்படும் திருநெல்வேலி- மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் மாா்ச் மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை வருகின்ற மே 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

நாங்குநேரி பரப்பாடி அருகே நேற்று (ஏப்ரல் 3) புதிதாக கட்டப்பட்டுள்ள ஆயத்த ஆடைகள் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதன் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளரிடம் சபாநாயகர் கூறும்போது, நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட என் மகனுக்கு சீட்டு கேட்டு தலைமைக்கு நான் அழுத்தம் கொடுத்ததாக வந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என கூறினார்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு : பாளை அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளம் மற்றும் சீவலப்பேரி ரோடு கக்கன் நகர் நீச்சல் குளங்களில் 5 பிரிவுகளாக 12 நாட்கள் வீதம் ஏப்ரல் மே மாதங்களில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.1770 . மேலும் விவரங்களுக்கு 74017 03506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை தொகுதிக்கான ஒட்டு சீட்டுகள் சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் லாரிகள் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை மாவட்டத்திற்கு இன்று (ஏப் 3) மதியம் கொண்டு வரப்பட்டுள்ளன. நெல்லை தொகுதிக்கு சுமார் 40 ஆயிரம் ஓட்டு சீட்டுகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அந்தந்த தொகுதிகளுக்கு இதனை அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சுட்டெரிக்கும் இந்த வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நெல்லையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு மேற்கூரை அமைத்து அசத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது நெல்லையில் வைரலாகி வருகின்றது.
Sorry, no posts matched your criteria.