Tirunelveli

News April 8, 2024

விளையாட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு

image

திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 24ஆம் தேதி பாளையங்கோட்டையில் தொடங்குகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் நேற்று (ஏப்ரல் 7) மாலை நடைபெற்றது. 27 விதமான விளையாட்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக பெரியதுரை வரவேற்றார்.

News April 7, 2024

நெல்லையில் நாளை கோலம் வரையும் நிகழ்ச்சி

image

பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை (ஏப்.8) நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு லட்சம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் இணைந்து 20000 தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்கள் வரையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் இன்று அறிவித்துள்ளார்.

News April 7, 2024

அதிகாரிகள் கண்காணிப்பில் பாஜக வேட்பாளர்

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாஜக பிரமுகர் சதீஷ் உள்பட சிலரிடம் நடத்திய சோதனையில் கோடி கணக்கில் பணம் சிக்கியது. அந்த பணம் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு வரப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தலில் சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் நயினார் நாகேந்திரனை கண்காணித்து வருகின்றனர்.

News April 7, 2024

பாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் பணம் பறிமுதல்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினரான தனியார் ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (ஏப்.7) அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 3.72 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 7, 2024

எம்ஜிஆர் வேடம் அணிந்த நிர்வாகி

image

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். அவருக்கு இன்று (ஏப்.7) அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியினர் தாழையூத்து,சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் எம்ஜிஆர் வேடம் அணிந்து எஸ்டிபிஐ நிர்வாகி ஒருவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

News April 7, 2024

நெல்லை பாரதிய ஜனதா கட்சியினர் அதிர்ச்சி

image

நெல்லை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று (ஏப்.6) இரவு ரயில் மூலம் நெல்லை தொகுதி பாஜகவின் தேர்தல் செலவுக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் ரூ4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனர். இதனால் நெல்லை தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1 <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

கிருஷ்ணாபுரம் கோயிலில் வெடிகுண்டு சோதனை

image

நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கோயிலில் நேற்று இரவு மோப்பநாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படை பிரிவினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை நடத்தினர்.

News April 6, 2024

கங்கைகொண்டான்: வெடிகுண்டு சோதனை

image

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவின் படி போலீஸ் பாதுகாப்பு நாளுக்கு நாள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ( ஏப்ரல் 6 ) கங்கைகொண்டான் மற்றும் தாழையூத்து ரயில் நிலைய பகுதிகளில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு படையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

News April 6, 2024

பாஜக வேட்பாளரின் நாளைய பிரச்சார விபரம்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நாளை (ஏப்.7) ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் காலை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் பாஜகவினர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

error: Content is protected !!