India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவு வரும் 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை வரும் மே மாதம் 4ம் தேதி பாளையங்கோட்டை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் நடத்தப்படுகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஓட்டு பதிவு இயந்திரங்களை வைக்க அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஹரி கிருஷ்ணன்(21). இவர் வீரப்பன் காலனி அருகே சென்றபோது மனோஜ் (27) , திருமலை கொழுந்துபுரம் மகாராஜா (20) ஆகியோர் தங்களது இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாக ஏற்றி மாற்று பாதையில் அழைத்துச் சென்றனர். இதை தட்டி கேட்ட அரிகிருஷ்ணனை இருவரும் ஹெல்மெட்டால் சரமாரி தாக்கினர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மனோஜ், மகாராஜாவை இன்று (ஏப்ரல் 8) கைது செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமரச மையங்கள் மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் நீதிமன்ற நிலுவை வழக்கு பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று (ஏப்ரல் 8) முதல் 12ம் தேதி வரை சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஸ்டிக்கரை அரசு பஸ்ஸில் மட்டும் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா இன்று தொடங்கி வைத்தார். நீதிபதிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 8) மானூர் வட்டாரம் தாழையூத்து மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அங்கு அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தலைப்பாகை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் நொச்சிகுளம் கலையரங்கம் அருகில் இன்று (ஏப்.8) அன்பு (32) என்ற இளைஞரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி டவுன் சரக உதவி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பேட்டை டவுன் பகுதியை சேர்ந்த 7 ரவுடிகளை கடந்த ஒரு வாரத்தில் கைது செய்தனர். நன்னடத்தை விதியை மீறும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று (ஏப்.7) தேர்தல் விதிமுறைகளை மீறி கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் இருக்கன்துறை போன்ற பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் பழவூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கு முழுமையாக தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள 14 வேட்பாளர்களும் இன்று (ஏப்.8) மாலை 5 மணிக்குள் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தேர்தல் செலவின பார்வையாளர் காசி சுஹைல் அனீஸ் நேற்று (ஏப்.7) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை பலப்படுத்தி உள்ளனர். பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவுபடி நேற்று (ஏப்.7) களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பெருமாள் கோயில் பகுதியில் மோப்பநாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் முன்னெச்சரிக்கையாக தீவிர சோதனை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.