India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையில் வரும் 12ஆம் தேதி காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக நெல்லை மாநகர் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் 13ஆம் தேதி காலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி இன்று (ஏப்.10) உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன் மகன் டாக்டர் ரவீந்திரன் மற்றும் மருமகள் டாக்டர் ரமணி ஆகியோர் நேற்று (ஏப்.9) கயத்தாறு அருகே நடந்த வாகன விபத்தில் மரணம் அடைந்தனர். இவர்களின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் தேரோட்டம் நாளை (ஏப்.11) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டவுன் கரியமாணிக்க பெருமாள் நான்கு ரத வீதிகள், சந்தி பிள்ளையார் கோவில் பகுதி, மேலரத வீதி மேல் பகுதி மட்டும், பாட்டபத்து, மேட்டு தெரு, சொக்கட்டான் தோப்பு ஆகிய பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு மட்டும் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என நெல்லை மின்வாரியம் இன்று (ஏப்.10) அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள காரையாறு அணைப்பகுதியில் முதலை உதவுவதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். பாபநாசம் காரையாறு அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் அங்குள்ள முதலைகள் கரையோரம் வந்து ஓய்வெடுத்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் யாரும் அணையில் உட்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அம்பாசமுத்திரம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவர் நேற்று (ஏப்.9) ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கை சின்னத்திற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டார். அப்பொழுது இரவில் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்தனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இன்று (ஏப். 9) தெலுங்கு பேசும் மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். தெலுங்கு பேசும் மக்களின் வருட பிறப்பு நாளான யுகாதி திருநாளை முன்னிட்டு இன்று நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது அதிகாலை முதலே ஏராளமான தெலுங்கர்கள் திரண்டு சுவாமி வந்து தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் தெலுங்கு வருட பிறப்பு தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இன்று (ஏப்.9) அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45-க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30-க்கு திருநெல்வேலிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கார்த்திகேயன் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: தேர்தல் வாக்குப்பதிவு முன்னிட்டு வருகிற 17ஆம் தேதி புதன்கிழமை முதல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகள் கூடங்கள் மூடப்பட்டிருக்கும். இதுபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4ம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு களக்காடு அண்ணா சிலை முன்பு நேற்று பட்டிமன்ற பேச்சாளர் ஐ.லியோனி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் I.N.D.I.A. கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என கூறினார். இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் நேற்று (ஏப்ரல் 8) இரவு மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது இவருக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவரும், தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஜான்பாண்டியன் பிரச்சாரம் செய்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.