India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தமிழக வக்பு வாரிய தலைவரும், அதிமுக மாநில அவைத் தலைவருமான தமிழ் மகன் உசேன் நேற்று (ஏப்ரல்12) இரவு பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியின் பத்தாண்டு கால சாதனைகளை சிறுபான்மை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் 20வது வார்டு செயலாளர் அமீர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருசை ஆதரித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல்12) பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை, மற்றும் திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 30 – 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளருக்கு விருந்து வழங்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தேர்தல் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாரத் நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசின் வீட்டிற்கு இன்று (ஏப்.12) வந்தார். அப்போது அவருக்கு அங்கு விருந்து அளிக்கப்பட்டது. அதில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்.12) காலை வரை மாவட்டம் முழுவதும் 415 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஏப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் வானிலை மந்தமாக காணப்படுவதால் இன்றும் மழை நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக மேலப்பாளையத்தில் நேற்று (ஏப்.11) இரவு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்பொழுது அவர் பேசுகையில், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் கை சின்னம் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 11) இரவு மேலப்பாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவரது உரையை கேட்பதற்காக திரளான பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தொண்டர்கள் திரண்டிருந்தனர். மக்கள் வெள்ளத்தில் அவரது வாகனம் பயணித்தது.

பெருமாள்குளம் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் ஜெயக்குமார் (22) என்பவர் கடந்த மார்ச் 15ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் ராஜா (34), பிரைட்சன் ( 24), டார்லின் அருமை குமார் (23) ஆகிய 3 பேரையும் எஸ் பி சிலம்பரசன் வேண்டுதலின்படி கலெக்டர் உத்தரவை அடுத்து இன்று (ஏப்ரல் 11) களக்காடு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.