India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களிடமிருந்து ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்.25) செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஸ்டார் கோச்சிங் சென்டர் நடத்தும் மாபெரும் மாணவர்களின் கோடை கொண்டாட்டம்-2024 போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மே 3,4ம் தேதிகளில் நடைபெற்று பரிசளிக்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதன் முன்பதிவுக்கு 94869 78527 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி இன்று(ஏப்.25) அறிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் தடையின்றி விவசாயம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(ஏப்.25) தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து 900 மெட்ரிக் டன் யூரியாவும், 320 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரமும் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு வந்தது. இதனை அதிகாரிகள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்க உள்ளனர்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன்(19) நரம்பு தளர்ச்சியால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (ஏப். 24) மாலை திடீரென மணிகண்டன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். நெல்லை அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் வருகின்ற 28 ஆம் தேதி 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் ஜலால் முஹம்மது, யூனுஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனர். இதில் மாணவர்கள் பங்கு பெற்று பயன்பெற மேலப்பாளையம் ஆபிஸர் அகாடமி நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

திருநெல்வேலியில் தற்பொழுது வெயில் வெளுத்து வாங்குவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகின்றது. இதனால் இறவை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது நீர் இருப்பை பொறுத்து சாகுபடி செய்யும் பயிர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம் இன்று (ஏப்.24) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி கூடங்குளத்தில் நடைபெற உள்ளது. இங்குள்ள ஹெப்ரான் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் முகாம் நடைபெறும் என வருங்கால வைப்பு நிதி மண்டல உதவி ஆணையாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நிலத்தை தனியார் தொழில் அபிவிருத்தி நிறுவனம் மோசடி செய்ததாக சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து ஏஎம்ஆர்எல் என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து 985 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவன இயக்குநர் பேரவை தலைவருக்கு இன்று பதில் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலர்களை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்த மூவரை போலீசார் இன்று(ஏப்.24) கைது செய்தனர். காதல் ஜோடியான திருவாரூரை சேர்ந்த இளைஞரும் வள்ளியூர் பகுதியை சேர்ந்த பெண்ணும் நேற்று(ஏப்.23) வள்ளியூர் முருகன் கோயிலுக்கு சென்றனர். அப்போது கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை பறித்த மூவர் மீது வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.

கடையம் அருகே மயிலப்பபுரத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சேர்ந்தமரத்தை சேர்ந்த பால்தாய் என்பவர் தனியார் பேருந்தில் வந்தபோது அவரிடம் 500 ரூபாய் பிட்-பாக்கெட் அடித்துள்ளனர். இது தொடர்பாக பங்களா சுரண்டை பகுதியை சேர்ந்த அஞ்சலி(25), பவானி(24) ஆகிய இருவர் மீதும் கடையம் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து இன்று கைது செய்தார்.
Sorry, no posts matched your criteria.