Tirunelveli

News April 26, 2024

நெல்லை: அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

image

திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஏப்.26) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தார். அவரை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமையில் மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு ஆலோசனை நடத்தினார்.

News April 26, 2024

நெல்லை நேற்றைய வெப்பநிலை விவரம்

image

நெல்லை, பாளையங்கோட்டையில் நேற்று (ஏப்.25) 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 26, 2024

கோடைகால பயிற்சி முகாம் அறிவியல் மையம் அழைப்பு

image

கொக்கிரகுளத்தில் உள்ள நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் 2ம் கட்ட அறிவியல் பயிற்சி முகாம் வரும் மே மாதம் 6ம் தேதி முதல் 10ம் தேதி நடக்கிறது. இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மாவட்ட அறிவியல் மையத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட அறிவியல் மைய அதிகாரிகள் இன்று (ஏப். 26) தெரிவித்தனர்.

News April 26, 2024

காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேருக்கு அபராதம்

image

பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த இருவரை தாக்கியதாக 2019ல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மீது மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் இழப்பீட்டு தொகையை ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரிடமும் சமமாக அரசு அபராதமாக வசூலித்துக் கொள்ளலாம் எனவும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இன்று (ஏப். 26) உத்தரவிட்டார்.

News April 26, 2024

நெல்லை: ஆணையர் அறிக்கை

image

திருநெல்வேலியில் பல்வேறு நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்பொழுது நடைபெற்று வரும் மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அவர்கள் மாநிலங்களுக்கு செல்ல விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா இன்று (ஏப்‌.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 26, 2024

நெல்லைக்கு இயற்கை அளித்த கொடை!!

image

அகத்தியர் அருவி, பாபநாசம் நகருக்குத் தெற்கிலும், கீழ் பாபநாசத்துக்கு வடக்கிலுமாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவி நீரானது பாபநாசம் நீர்மின் உற்பத்தி நிலையத்தை அடைந்து, பின் அங்கிருந்து பாபநாசம் அணையின் நீர்பிடிப்புப் பகுதியைச் சென்றடைகிறது. அகத்திய முனிவருக்கு சிவன் பார்வதி இவ்விடத்தில் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. நெல்லையின் பிரதான சுற்றுலாத் தலமாக இவ்வருவி உள்ளது.

News April 26, 2024

பஸ் நிலைய கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்

image

மாநகராட்சி துணை ஆணையர் தாணுமூர்த்தி ஆலோசனைப்படி சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 25 ) மாநகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாநகராட்சி கடைகளுக்கு தொழில் உரிமம் செலுத்தாத நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் நடைபாதையில் பொதுமக்கள் இடையூராக வைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

News April 26, 2024

மாணவர் சேர்க்கைக்கு தயாராகும் கல்லூரிகள்

image

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. புதிய 2024 -25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கலை அறிவியல் கல்லூரிகள் தயாராகி வருகின்றன. மே முதல் வாரத்தில் பிளஸ் 2 ரிசல்ட் வர உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பாளை சேவியர் கல்லூரியில் இந்த ஆண்டு 3 புதிய பாடத்திட்டம் இளங்கலையில் அறிமுகம் ஆகிறது.

News April 26, 2024

நெல்லை மாணவன் சாதனை

image

வண்ணாரப்பேட்டை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் சென்டரில் பயிலும் மாணவன் ஸ்ரீராம் இந்த வருடம் நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 65-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளான். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவனை ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் முதன்மை கல்வி மற்றும் வணிக தலைவர் தீரஜ் மிஸ்ரா நேற்று (ஏப்.25)பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

News April 25, 2024

திசையன்விளை: சதம் அடித்த வெயில்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் நீடிக்கிறது மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திர கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில், இப்போது அக்னி நட்சத்திரம் வெயில் போல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் தொடர்ந்து தினமும் மாவட்ட முழுவதும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகிறது. இந்நிலையில் இன்று திசையன்விளை, பாளையங்கோட்டை வட்டாரத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவானது.

error: Content is protected !!