India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் மகாராஜன், இவர் சென்னையில் லாரி டிரைவராக உள்ளார். இவர் மனைவி விஜயலட்சுமி 2 குழந்தைகளுடன் வீட்டில் 20ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது முன்பகை காரணமாக அவரது உறவினர் தங்கச்சாமி (28) பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினார். பாளை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் விசாரித்து தங்கசாமியை நேற்று (ஏப்ரல் 29) கைது செய்தார்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியினை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பெற விரும்பும் மக்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஏப்.29) தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட (தென்காசி உள்பட) நீதித்துறையில் 84 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கோடை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்.29) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) நெல்லையில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திசையன்விளை அருகே உள்ள வெங்கட்ராயபுரம் கிராமத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 80 மாணவிகள் மட்டுமே தற்போது படிப்பதால் இந்த பள்ளியை நடப்பு கல்வி ஆண்டுடன் மூடுவதாக நிர்வாகம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று (ஏப்ரல் 29) கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, பள்ளியை தொடர்ந்து அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று (ஏப்.29) பள்ளி மாணவர்களுக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமானது வருகின்ற மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஹாக்கி, ஜிம்னாஸ்டிக், தடகளம் உள்ளிட்ட போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் வெப்பத்தினால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சில பகுதிகளில் மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஏப்.29) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் மொத்தமாக மாவட்டத்தில் 9 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் வசந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று (ஏப்.28) இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாணவிகளின் பரத நாட்டியத்தை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் முண்டந்துறை வனச்சரக பகுதிகளில் இன்று வரையாடு கணக்கெடுக்கும் பணி வனச்சரகர் கல்யாணி தலைமையில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியானது ஐந்தலைப் பொதிகை, அடுப்புகள் மொட்டை, அகத்தியர் மலை, செம்பூஞ்சி மொட்டை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த பணி முடிவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்லை மாநகரில் அடுத்த 17 ஆண்டுகால வளர்ச்சி தொடர்பான பொது வரைவு திட்ட அறிக்கை tirunelvelimasterplan.in என்ற பிரத்தியேக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் முடியவுள்ள நிலையில், மே மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை நகர் ஊரமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே மாநகர மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கருத்து பதிவிடலாம்.
Sorry, no posts matched your criteria.