Tirunelveli

News April 30, 2024

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் தீவிர பரப்புரை

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று (ஏப். 30) மூன்றாம் கட்ட தேர்தல் வேட்பாளருக்காக ஆதரவு திரட்டினார். நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் ஆந்திர மாநிலம் நெல்லூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜூவை ஆதரித்து தீவிர பரப்புரை செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுக்களை சந்தித்து தீவிர ஆதரவு திரட்டினார்.

News April 30, 2024

நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலில் மாவட்டத்தில் தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று மாலை 7 மணி வரை நெல்லை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 30, 2024

தமிழறிஞருக்கு மாநகராட்சி மேயர் மரியாதை

image

தமிழறிஞர் கா.சு.பிள்ளை 79வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (ஏப்.30) திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் நினைவு ஸ்தூபிக்கு மாநகராட்சி மேயர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேரன் சுப்பிரமணியன், பேத்தி அழகம்மாள் மற்றும் குடும்பத்தினர், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.

News April 30, 2024

திருநெல்வேலி மழைப்பொழிவு விவரம்

image

கோடை வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று நெல்லை மாவட்டத்தில் மழை பெய்தது. திருநெல்வேலியின் மழைபொழிவு அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மாஞ்சோலையில் 3 செ.மீட்டரும், காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், ஊத்து பகுதியில் ஒரு சென்டி மீட்டரும் மழைபொழிவு பதிவானது.

News April 30, 2024

நெல்லை: தலையை துண்டித்து கொன்ற தந்தை கைது

image

பாளை அருகே மேலபாட்டத்தை சேர்ந்த மாரியப்பன் (56) என்பவரது மகள் முத்துப்பேச்சி (36). இவருக்கும், நடுவக்குறிச்சி கொம்பையாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் முத்துப்பேச்சி வேறொரு நபருடன் தகாத உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்து அவரது தந்தை மாரியப்பன் நேற்று (ஏப்.29) வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் முத்துப்பேச்சியின் தலையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். மாரியப்பனை போலீசார் கைதுசெய்தனர்.

News April 30, 2024

மாஞ்சோலையில் அதிகபட்ச மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஏப்.30) மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள மழை அளவு குறித்தான செய்திக்குறிப்பில் அதிகபட்சமாக மாஞ்சோலை பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக 90.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

நெல்லை மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று (ஏப்.29) 101.3° பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்

News April 30, 2024

நெல்லை மக்களே இன்று வரி செலுத்தினால் லாபம்

image

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 2024-25ஆம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரியை இன்று மாலைக்குள் செலுத்துபவர்களுக்கு அவர்களது சொத்து வரியிலிருந்து ஐந்து சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சி சேவை மையங்களில் வரியை செலுத்தலாம்.

News April 30, 2024

நெல்லை நகரில் போக்குவரத்து முடக்கம்

image

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இன்று (ஏப்.30) காலை ஒரு லாரி திடீரென பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நெல்லை தென்காசி மார்க்கத்தில் இருவழியிலும் செல்லும் வாகனங்கள் சுமார் 5 கிமீ தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. அதன்பின் அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நெல்லை நகரில் போக்குவரத்து முடங்கியது.

News April 30, 2024

நெல்லை: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!