Tirunelveli

News May 2, 2024

நெல்லை: கோயிலில் புகுந்து நகை திருட்டு

image

மூன்றடைப்பு அருகே உள்ள தாழைகுளத்தில் முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று (மே 1) அதிகாலை மர்மநபர் கோயில் பூட்டை உடைத்து புகுந்து அம்மன் சிலையில் இருந்த 3 பொட்டு தங்க தாலியை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி அளித்த புகாரின்பேரில் மூன்றடைப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் அபிஷேக் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.

News May 1, 2024

தமிழ்நாட்டில் இங்குதான் அதிக மழை பதிவு

image

பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மார்ச் 1 முதல் நேற்று ஏப்ரல் 30 வரையிலான கோடை காலத்தில் தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 212 மிமீ மழையும் மாஞ்சோலையில் 209 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
மே மாதத்திலும் மாஞ்சோலையில் அதிக மழை பெய்யும் என நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மே 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

image

சேரன்மகாதேவி அடுத்த சக்தி குளம் பகுதியை சேர்ந்தவர் ராமையா மகன் முருகன் (56). விவசாயியான இவரது வீட்டில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் பெட்ரோல் குண்டு மர்ம நபர்களால் வீசப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 1, 2024

மே தின உறுதிமொழி எடுத்த தொழிலாளர்கள்

image

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் தொழிலாளர்கள் மே தின உறுதிமொழி எடுத்தனர். பேட்டை சுத்தமல்லி விலக்கில் ஜனநாயக சுமை தூக்கும் தொழிலாளர் இன்று (மே.1) மே தினம் கொண்டாடினர். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர் சங்க செயலாளர் முத்துக்குமார் தலைமையில் மே தின உறுதி ஏற்பு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், துணைத் தலைவர்கள் அன்புச்செல்வி செல்வம் உட்பட 13 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

News May 1, 2024

திருநெல்வேலி மாவட்டத்தில் 18 மிமீ மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் வெளுத்து வாங்கினாலும் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 1) வெளியிட்டுள்ள மழை அளவு செய்தி குறிப்பில் அதிகபட்சமாக காக்காச்சி பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் 18 மீட்டர் மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

News May 1, 2024

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எண் வெளியீடு

image

ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பதை தெரிவிக்க திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகம் சார்பில் இன்று (மே 1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொடர்பு எண் வெளியிட்டுள்ளனர். அதில் திருநெல்வேலி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் (83000 70283), காவல் ஆய்வாளர் (94981 20504), சார்பு ஆய்வாளர் (94981 95193) ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

News May 1, 2024

ஒரேநாள் வாகன சோதனை: 730 வழக்குகள் பதிவு

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி நெல்லை மாநகரில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் “ஸ்டிராமிங் ஆபரேஷன்” என்ற பெயரில் போலீசார் நேற்று (ஏப்ரல் 30) காலை முதல் இரவு வரை தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள், பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தல் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு ஒரே நாளில் 730 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

News May 1, 2024

நெல்லை மாணவியின் அரிய சாதனை

image

தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்ஷனாவின் 3வது சாதனை நிகழ்வாக ஓராண்டு உழைப்பால் தாம்பூலத்தில் உருவாக்கிய ஓவியங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து நேற்று (ஏப்ரல் 30) மாலை நடைபெற்றது. சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சௌந்தர மகாதேவன் இந்த கண்காட்சியினை பார்வையிட்டு துவக்கி வைத்தார்.

News May 1, 2024

10-க்கும் மேற்பட்டோர் போக்சோ சட்டத்தில் கைது

image

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நெல்லை டவுன் அனைத்து மகளிர் ஸ்டேஷன் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் நாகராஜை நேற்று (ஏப்.30) கைது செய்தனர். இதனால் ஏப்ரல் மாதத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் போக்சோ சட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

சிறந்த சமையல் குழுவிற்கு முதல் பரிசு வழங்கி பாராட்டு

image

எம்ஜிஆர் குரூப் ஆஃப் கம்பெனி சார்பில் பாளையங்கோட்டையில் வைத்து வரவேற்பு விழா மற்றும் சிறந்த சமையல் குழுவிற்கு பாராட்டு விழா நேற்று (ஏப்.30) நடைபெற்றது. எம்ஜிஆர் குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் கோவிந்தராஜன் கலந்துகொண்டு மேலப்பாளையத்தை சேர்ந்த நண்பர்கள் சமையல் கேட்டரில் குழுவிற்கு முதல் பரிசாக தங்க மோதிரம் வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!