India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை ரயில் நிலையத்தில்
தவறவிட்ட நகையை போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். நேற்று (மே.4) காலை நெல்லைக்கு வந்த கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஒருவர் தவறுதலாக அருகில் இருந்த பையை சேர்த்து எடுத்துச் சென்றார். பின் அதனை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நாகர்கோவிலை சார்ந்த சசிரேகாவின் பை என தெரிந்ததால் அதில் இருந்த 15 பவுன் நகையுடன் பையை போலீசார் சசிரேகாவிடம் வழங்கினர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் இன்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் உடல் நல்லடக்கம் நாளை 10:00 மணியளவில் கரைசுத்துபுதூர் கிராமத்தில் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் இன்று (மே.4) சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம், ஜெயக்குமார் மரண வாக்குமூலம் எழுதிய கடிதம் எனக்கு வரவில்லை என கூறினார்.

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூறு ஆய்வு சற்று முன் தொடங்கியது. உடற்கூறு ஆய்வு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மே.4) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் தவறுகளை சமரசம் இன்றி சுட்டிக் காட்டும் சவுக்கு மீடியா மற்றும் அதன் ஊழியர்கள், செய்தியாளர்கள் மீதான வழக்குகளும், தொடர்ச்சியான கைதுகளும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ இன்று (மே.4) செய்தியாளர்களிடம் கூறியதாவது, மறைந்த ஜெயக்குமார் தனசிங் தனது நெருங்கிய நண்பர் கட்சிக்காக தீவிரமாக உழைத்தவர். அவரது விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்துவதில் எந்த உண்மையும் இல்லை. பின்புலத்தில் யாரோ செயல்படுகின்றனர். காவல்துறை உண்மையை கண்டறியும் என வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தபோதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருக்க மாட்டார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமானதை தொடர்ந்து உவரி அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் இன்று (மே 4) சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான சம்பவம் இன்று நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மேலும் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது அவர் எழுதிய கடிதம் ஒன்று வைரலாகி வருகின்றது.

திருநெல்வேலியை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இன்று (மே 4) காலை அவரது சொந்த ஊரில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து கேள்விப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். தான் உடனடியாக நெல்லைக்கு செல்வதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.