Tirunelveli

News May 6, 2024

+2 RESULT: நெல்லையில் 96.44% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் மாவட்டத்தில் தேர்ச்சி 93.67% பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 95.07 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 97.48% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

காருக்குறிச்சி: மண்பானை விற்பனை ஜோர்

image

கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மண்பான பொருட்கள் தயாரிப்பில் பிரசித்திப்பெற்ற சேரன்மாதேவி அருகே உள்ள காருக்குறிச்சியில்,  மண்பானை தொழில் களைக்கட்டியுள்ளது. இங்கு விதவிதமான மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றிற்கு தமிழக மற்றும் இன்றி கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ஆர்டர் கொடுக்கப்பட்டு வாங்கி செல்வதாக இதை தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News May 6, 2024

காங். தலைவர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார்(60) மர்மமான முறையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 7 தனிப்படையை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அவர் உறவினர்கள் வழங்கிய கடிதங்கள் மற்றும் இறந்து கிடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மரணத்திற்கான மர்ம நீடிக்கிறது.

News May 6, 2024

நெல்லை: தொடரும் அலைகளின் சீற்றம்!

image

தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று(மே 6) நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் எனவும் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

News May 6, 2024

நெல்லை: ‘கோடை கொண்டாட்டம்’ பரிசளிப்பு விழா

image

நெல்லை அரசு அருங்காட்சியகமும், ஸ்டார் கோச்சிங் சென்டரும் இணைந்து மாணவர்கள்  திறமைகளை வெளிப்படுத்தும் ‘மாபெரும் கோடை கொண்டாட்டம்’ 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், நடனம், சிலம்பம், யோகா போன்ற போட்டி நடைபெற்றன. இதன் பரிசளிப்பு விழா நேற்று(மே 5) இரவு நடந்தது. காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை தாங்கினார்.

News May 5, 2024

நெல்லை மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடு

image

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது.
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
மாணவர்கள் பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும். நெல்லையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி இன்று( மே 5) தெரிவித்தார்.

News May 5, 2024

நாங்குநேரி அருகே விபத்து: இருவர் பலி

image

நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தில் இன்று காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளைய நயினார் குளத்தை சார்ந்த ரத்தினசாமி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 5, 2024

மறுப்பு அறிக்கை வெளியிட்ட மாவட்ட காவல்துறை

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை இன்று (மே 5) மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, “இறந்து போன ஜெயக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மரண வாக்குமூலம் கடிதம் அளித்ததாக கூறி சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது” என தெரிவித்துள்ளனர்.

News May 5, 2024

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் தலைவர்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறுதி சடங்கு திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் இன்று (மே 5) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொள்ள உள்ளார். உடன் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

News May 5, 2024

நெல்லை: வாலிபருக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை, ராமையன்பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் மதன் (30). அதே பகுதியைச் சேர்ந்த  தீபன் (27). முன் விரோதம் காரணமாக நேற்று மதனின் வீட்டிற்கு சென்ற தீபன் மற்றும் அவரது நண்பர் முகேஷ் (28) இருவரும் தகராறில் ஈடுபட்டு மதனை அரிவளால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மதன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!