Tirunelveli

News May 7, 2024

நெல்லை ரயில் நிலையத்தில் மண்பானை குடிநீர்

image

தற்போதைய கோடைகாலத்தில் கடும் வெப்பம் நிலவுவதோடு கூடுதலாக வெப்ப அலையும் வீசுகிறது. இதனால் திருநெல்வேலி ரயில் நிலைய பயணிகளுக்கு மண்பானைகளில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார். மேலும் பயணிகளின் உடல் நீர்ச்சத்து அதிகரிக்க உப்பு சர்க்கரை கலந்த நீர் கரைச்சலும் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

News May 7, 2024

நெல்லை: ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

image

நெல்லை டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (53). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நேற்று சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 6, 2024

மறைந்த காங்கிரஸ் தலைவர் செல்போன் மாயம்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த ஜெயக்குமாரின் செல்போன் இன்று (மே 6) மாயமாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 6, 2024

அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

image

வடக்குச் செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதி 57 பேரும் தேர்ச்சி பெற்றனர். முதல் மதிப்பெண் 548 இரண்டாவது மதிப்பெண் 547. 500க்கு மேல் 8 மாணவர்கள் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 100 மதிப்பெண் ஒரு மாணவி பெற்றுள்ளார். கணிணி அறிவியலில் 100 மதிப்பெண் ஒரு மாணவி பெற்றுள்ளார்.

News May 6, 2024

வடக்கன் குளம் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை

image

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளி மாணவி ஜாஸ்லின் பிரீத்தி 600-க்கு 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அந்த மாணவியை பாலகிருஷ்ணா பள்ளிகளின் தலைவர் Dr. ம. கிரகாம்பெல் வாழ்த்தி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா பள்ளியின் தாளார் திவாகர், முதல்வர் சுடலையாண்டி இருந்தனர்.

News May 6, 2024

கலெக்டர் திடீர் ஆலோசனை

image

நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து அனைத்து துறை அதிகாரிகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் இன்று (மே.6) பொது மக்களுக்கு எவ்வாறு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது? குறித்து ஆலோசனை நடைபெற்றது.

News May 6, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக தமிழகத்தில் உள்ள சில இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

காங்கிரஸ் தலைவர் மரணம் குறித்து பரபரப்பு பேட்டி

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி நெல்லையில் இன்று (மே 6) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் கூலிப்படையினரால் தான் ஜெயக்குமார் கொல்லப்பட்டிருப்பார் என பரபரப்பாக தெரிவித்தார்.

News May 6, 2024

நெல்லை: மாணவி மாநில அளவில் 3-வது இடம்

image

இன்று வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவில் பாளை சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி நிலஞ்சனா 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தை பெற்று நெல்லைக்கு பெருமை சேர்த்துள்ளார். நெல்லை மாவட்ட அளவில் இந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளார். இந்த மாணவியை பள்ளி தாளாளர் லட்சுமி நிரஞ்சன், முதல்வர் சங்கர பாகம், பயிற்றுவித்த அசிரியர்கள் ஆகியோர் இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.

News May 6, 2024

நெல்லை எஸ்பி அவசர உத்தரவு

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமாரின் உடல் மே.2ம் தேதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அது சம்பந்தமாக 2 கடிதத்தில் அவர் எழுதி வைத்த நபர்களிடம் இன்று(மே.6) காலை விசாரணை நடத்தப்படுகிறது. இதையடுத்து அந்தந்த காவல் நிலையங்களில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!