India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மாணவன் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், இன்று (மே 7) முதல்வர் ஸ்டாலினை மாணவர் சின்னத்துரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் டூ தேர்வில் சாதிய வன்கொடுமையால் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்றுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் மாணவன் சின்னதுரை உயர்கல்விக்கு அனைத்து வகையிலும் ஏற்கனவே கூறியபடி நான் துணை நிற்பேன் என்று உறுதிப்படுத்தி உள்ளார். கல்வி மட்டுமே சமத்துவம் வளர மிகப்பெரிய ஆயுதம் எனவும் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் இன்று (மே 7) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறப்பு தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்களிடம் நெல்லை எஸ்பி சிலம்பரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் நெல்லை ஆட்சியர் இன்று (மே 7) ஆய்வு செய்தார். இடையன்குடியில் நடந்த கால்டுவெல் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிறகு நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் திசையன்விளைக்கு சென்றார். அப்போது அங்குள்ள பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அவருடன் அப்பகுதியை சேர்ந்த பல்துறை அதிகாரிகளும் சென்றனர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணத்தில் குற்றவாளிகள் பிடிப்பதற்காக 7-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீசார் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கேரளாவுக்கு தனிப்படையினர் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் இன்று தனிப்படை போலீசார் தூத்துக்குடி மாவட்டம் பூச்சிகாடு தனியார் கல்லூரியில் வைத்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைக்காக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் நேற்று சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் இன்று (மே 7) மதியம் 2.30 மணிக்கு மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராவதற்காக நெல்லைக்கு தங்கபாலு வருகை தர உள்ளார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான உயிரிழந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரது எழுதிய இரண்டு கடிதங்கள் வைரலாகும் நிலையில் அந்த இரண்டு கடிதங்களும் அவரே எழுதியது என தடயவியல் துறை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கடந்த மே.2ஆம் தேதி இறந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் வழக்கு தொடர்பாக சிலரை தனித்தனியே விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஜெயக்குமாரின் மரண வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களை 15 தினங்களுக்குள் ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் அதில் தொடர்புடைய 40 பேரை தனித்தனியே விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தமிழக அரசியல் வட்டாரத்தை பரபரப்புக்கு உள்ளாகியுள்ள நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தின் மர்மம் நீடிக்கிறது. இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் முதற்கட்ட அறிக்கை சீல் வைத்த கவரில் எஸ்பியிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில், அவரது கை, கால்கள் வயர்கள் அல்லது கயிற்றால் கட்டப்பட்ட தடங்கள் மிகவும் ஆழமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.