Tirunelveli

News May 8, 2024

ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் அவருக்கு பணம் கொடுக்க வேண்டிய நபர்களின் விவரங்களை குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் ஜெயக்குமாருக்கு கொடுக்க வேண்டிய 50 லட்சம் பணத்தை அவரது குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைத்தனர்.

News May 8, 2024

கூலிப்படையினரை குறி வைக்கும் போலீசார்

image

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் மர்மமான இறப்பு குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஆறு நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் குறித்த தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் 10 தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களில் இன்று (மே 8) போலீசார் கூலிப்படையினரை குறி வைத்து தேடி வருகின்றனர்.

News May 8, 2024

திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

image

திருநெல்வேலி மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ராஜன் ஏப்ரல் 30ஆம் தேதி ஓய்வு பெற்றதை அடுத்து புதிய மாவட்ட கல்வி அலுவலராக சே.பாலன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று (மே 8) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News May 8, 2024

தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு: தந்தை பலி

image

திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குழியை சேர்ந்த தந்தை, மகனை மர்ம நபர்கள் இன்று (மே 8) அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் தந்தை டேவிட் (56) சம்பவ இடத்திலேயே பலியானார்‌. மகன் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 8, 2024

காங். நிர்வாகி மர்ம சாவில் மேலும் 2 தனி படைகள்

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கேபிகே ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் அவர் பயன்படுத்தியுள்ள இரண்டு செல்போன்களையும் காணவில்லை. இதனால் விசாரணைக்கு உதவியாக மேலும் இரண்டு தனிப்படைகள் நேற்று அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மொத்தம் பத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 8, 2024

நெல்லையப்பர்: 40 நாள் திருவிழா தொடங்கியது

image

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்வாக இன்று (மே 8) காலை பந்தக்கால் நட்டு விமரிசையாக துவங்கியது. 40 நாட்களுக்கு மேலாக நடைபெறும் ஆனி பெருந்திருவிழாவின் முதல் விழாவான பந்தக்கால் நடும் விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தாிசனம் செய்தனர். நிர்வாக அலுவலர் ஐயர் சிவமணி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

News May 8, 2024

way2 செய்தி எதிரொலி: நெடுஞ்சாலை துறை நடவடிக்கை

image

பாளையிலிருந்து திருச்செந்தூர் வரை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பெரும்பாலான இடங்களில் பணி முடிந்து சில இடங்களில் சாலையின் ஒரு பகுதியில் அங்கு குழிதோண்டும் பணி நடக்கிறது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் போதிய அளவு இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து way2 செய்தி சுட்டிக்காட்டியது. இதன் எதிரொலியாக தற்போது அங்கு பெரிய அளவில் தடுப்புகள் வைத்துள்ளனர்.

News May 8, 2024

அரசு பேருந்து மோதி 12ஆம் வகுப்பு மாணவன் பலி

image

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இன்று (மே 7) அரசு பேருந்து மோதியதில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

News May 8, 2024

கல்லூரி கனவு 2024 மே.8இல் தொடக்கம்

image

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, நெல்லையில் இன்று கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 7, 2024

மாணவர் சேர்க்கை: பல்கலைப்பதிவாளர் அறிக்கை

image

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று (மே.7) விடுத்துள்ள செய்தி குறிப்பு. பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, நாகம்பட்டி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகள் இயங்குகின்றன. இங்கு இளங்கலை, முதுகலை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!