Tirunelveli

News May 9, 2024

நெல்லை: மாட்டு தொழுவத்தில் பச்சிளம் குழந்தை உடல்

image

கங்கைகொண்டானை அடுத்த இத்திகுளத்தில் காளிராஜ் என்பவரின் வீட்டு தொழுவத்தில் நேற்று (மே 8) பச்சிளம் பெண் குழந்தையிந் உடல் கிடந்தது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். குழந்தையின் உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். உடலில் தொப்புள் கொடி இருந்தது, பிறந்த நாளிலேயே குழந்தை இறந்தது தெரியவந்தது. குழந்தையை அங்கு வீசி சென்றவர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 9, 2024

சட்ட படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு சட்டப் படிப்புக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை சட்ட பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

மாணவர் சின்னதுரையை சந்தித்தது ஏன்? நடிகர் பேட்டி

image

+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த, சாதிய வன்மத்தால் தாக்குதலுக்குள்ளான மாணவன் சின்னத்துரையை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் தாடி பாலாஜி தேவையான உதவிகளை செய்வதாக அவரிடம் உறுதி கூறினார். தொடர்ந்து செய்தியாளரிடம் கூறுகையில், சின்னத்துரையை சந்திக்க ஒரே காரணம், சின்னத்துரை அளித்த பேட்டியில், தன்னை தாக்கிய மாணவர்களும் வெற்றிபெற வேண்டும் என்று கூறியிருந்தார். அதனால் அவரை நேரில் சந்தித்தேன் என்றார்.

News May 9, 2024

நெல்லை: நேரில் வந்து பாராட்டிய பிரபல நடிகர்

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நாங்குநேரி மாணவர் சின்னத்துரையை பிரபல நடிகர் நேரில் வந்து பாராட்டினார். சாதிய வன்மத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் கடும் உழைப்பால் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் சின்னத்துரையை அவரது வீட்டில் பிரபல நடிகர் தாடி பாலாஜி நேற்று (மே.8) இரவு நேரில் வந்து பாராட்டினார்.

News May 8, 2024

உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிக்கு மாணவர்களுக்கு அழைப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் வருகின்ற மே 11ஆம் தேதி பாத்திமா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாலை 5 மணிக்கு 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கு பெற மேலப்பாளையம் கல்வி அறிஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று (மே 8) அழைப்பு விடுத்துள்ளனர்.

News May 8, 2024

காங். நிர்வாகி கொலை: மகன்களிடம் விசாரணை

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து 10 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவரது மகன்களிடம் திசையன்விளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.

News May 8, 2024

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து இன்று (மே 8) மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அலுவலர்களுடன் பல்வேறு கலந்துரையாடல் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை ஆட்சியாளர் வழங்கினார். இந்த ஆய்வின்போது போக்குவரத்து அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News May 8, 2024

அடுத்த கட்ட விசாரணைக்கு போலீசார் திட்டம்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அவரது செல்ஃபோன் மாயமான நிலையில் சுவிட்ச் ஆப் ஆவதற்கு முன் வரை பேசியவர்களிடம் மட்டுமல்லாமல் ஜெயக்குமார் வீட்டின் அருகில் உள்ள டவரில் பதிவான எண்களை கொண்டு அடுத்த கட்ட விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

News May 8, 2024

வானிலையில் மாற்றம்: ஆய்வாளர் முக்கிய தகவல்

image

திருநெல்வேலி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மே 8) விடுத்துள்ள வானிலை பதிவு: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்திய நிலையில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை, இரவில் நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், மதுரை, தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

News May 8, 2024

காங்கிரஸ் நிர்வாகி மறைவு: 10 கிமீ தூரம் சிசிடிவி ஆய்வு

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்ததால் அவரது இல்லம் அமைந்திருக்கும் கரைசுத்துப்புதூர் பகுதியில் 10 கிமீ தூரத்திற்கு சிசிடிவி கேமராக்களை போலீசார் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆவதற்கு முன்வரை பேசியவர்களிடம் மட்டுமல்லாமல் ஜெயக்குமார் வீட்டின் அருகில் உள்ள டவரில் பதிவான எண்களைக் கொண்டும் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!