Tirunelveli

News May 10, 2024

ஜெயக்குமார் கொடூர சாவு: கொலை வழக்காக மாற்றம்

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்டு பிறகு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனால் விசாரணைக்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர்,  கொலை செய்யப்பட்ட பிறகுதான் கேபிகே ஜெயக்குமார் உடல் எரிக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளனர். எனவே உவரி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவு செய்துள்ள வழக்கை இன்று கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்.

News May 10, 2024

அட்சய திருதியை: நெல்லையில் மக்கள் உற்சாகம்

image

அனைத்து பகுதிகளிலும் அட்சய திருதியை விழா இன்று (மே 10) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நெல்லை, பாளை பகுதிகளில் உள்ள நகை கடைகள் காலை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. தங்க நகை மற்றும் புதிய பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதை காணமுடிகிறது. கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

News May 10, 2024

மழையின் அளவு வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் நேற்று பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில் மாவட்டத்தில் 24 மணி நேரப்படி பாபநாசம் பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று (மே 10) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 10, 2024

நெல்லை: எஸ்எஸ்எல்சி தேர்வில் 93.04 % தேர்ச்சி

image

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று மே 10ஆம் தேதி தமிழகத்தில் வெளியிடப்பட்டது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் 93.04% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அருகே உள்ள தென்காசி மாவட்டம் 92.69 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

News May 10, 2024

ஜெயக்குமார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றமா

image

திருநெல்வேலி என்ஜிஓ காலனியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று (மே 9) சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வை தொடர்ந்து இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கு சிபிசிஐடிக்கு மாறுகிறதா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

News May 10, 2024

நெல்லை ஐடிஐ: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10 ) வெளியான நிலையில் திருநெல்வேலி பேட்டை தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.n என்ற இணையதளம் மூலம் ஜூன் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 10, 2024

‘மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம்’

image

அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் கணேசன் ராஜா செய்தியாளரிடம் நேற்று (மே 9) கூறும்போது, போலீசாரின் அராஜகம் அதிகரித்துவருகிறது. தேவர்குளம் பகுதியில் போலீசார் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி அறவழியில் போராட்டம் நடத்த முயன்ற மக்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

News May 10, 2024

10th RESULT: நெல்லையில் 93.04% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் 93.04% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.70% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 96.21% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

இரவில் பேச்சு வார்த்தை நடத்திய மாநில நிர்வாகி

image

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா நேற்று (மே 9) இரவு தேவர்குளத்தில் உதவி ஆய்வாளரை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். அப்பொழுது மக்களுக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பதாக அவர் உறுதியளித்தார். இதில் அமமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

News May 10, 2024

தேர்தல் பாதுகாப்பு: புறப்பட்ட நெல்லை போலீசார்

image

ஆந்திரா மாநிலத்தில் வரும் 13ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு பணிக்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயுதப்படை போலீசார் நவீன ஆயுதங்களுடன் 150 பேரும், 250-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.

error: Content is protected !!