Tirunelveli

News May 15, 2024

நெல்லைக்கு கடந்தாண்டு 7ம் இடம்; இந்தாண்டு 11ம் இடம்

image

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 1 தேர்வுகள் வெளியாகின. இதில் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று பெருமையை பெற்ற பாளையங்கோட்டையை உள்ளடக்கிய நெல்லை மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு ஏழாம் இடத்தில் இருந்து இந்த ஆண்டு 11ஆம் இடத்திற்கு பின்தங்கியது. இதன்மூலம் தேர்ச்சி சதவீதம் குறைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News May 15, 2024

ஜெயக்குமாரை 7 கிமீ பைக்கில் பின் தொடர்ந்தது யார்?

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமாக உயிரிழந்த வழக்கில் நாங்குநேரி டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையில் போலீசார் திசையன்விளை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை நேற்று ஆய்வு செய்தபோது 2 நபர்கள் ஒரு பைக்கில் ஜெயக்குமார் சென்ற காரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 14, 2024

திருநெல்வேலியில் 80 டிகிரி வெப்பம் பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வெப்பத்தின் அளவு தினம்தோறும் சதத்தை தாண்டி பதிவாகி வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. அந்த வகையில் இன்று மழை பெய்தாலும் மாவட்டத்தில் வெப்பத்தின் அளவு 80.7 டிகிரி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

நெல்லை: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

ஒரே நாளில் 102 மிமீ கோடை மழை பதிவு

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று (மே 13) பரவலாக கோடை மழை பெய்தது. இன்று காலை 6 மணி வரை மாவட்ட முழுவதும் மொத்தம் 102.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டை நெல்லையில் தலா 18 மில்லி மீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு 15 மிமீ., கொடுமுடியாறு 12, நம்பியாறு 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாங்குநேரி, நான்கு முக பகுதியில் தலா 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

News May 14, 2024

நெல்லை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 12ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருநெல்வேலி மாவட்டம் 12 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 89.14% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 82.39 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.74 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

பாஜக பொருளாளருக்கு சம்மன் அனுப்ப முடிவு

image

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் இருந்து சென்னையில் ரயிலில் கடந்த மாதம் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் பாஜக நிர்வாகி முரளி ஆகியோருக்கு இன்று சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News May 14, 2024

‘ஜெயக்குமார் மரணம் ஒரு வாரத்திற்குள் முடிவு தெரியும்’

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமார் மரணம் தொடர்பான விவரங்கள் ஒரு வாரத்திற்குள் தெரியவரும் என தென்மண்டல போலீஸ் ஐஜி கண்ணன் நெல்லையில் நேற்று (மே 13) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தனிப்படை போலீசார் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. வழக்கின் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என்றார்.

News May 14, 2024

திருநெல்வேலியில் 98.60 மில்லி மீட்டர் மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் நேற்று நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமாக 98.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக பாளையங்கோட்டை, ராதாபுரம், திருநெல்வேலி பகுதிகளில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 14) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 14, 2024

அதிகபட்சமாக 18 மில்லி மீட்டர் மழை பதிவு

image

நெல்லை மாவட்டத்தில் அம்பை, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாபநாசம், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இதில் அதிகபட்சமாக பாளையங்கோட்டை, ராதாபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!