India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டம் காங்கிரஸ் நிர்வாகி இறப்பில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையைக் கையில் எடுத்தனர். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்காததால் அடுத்த கட்ட விசாரணையாக இறப்பிற்கு முன் ஜெயக்குமாரின் செல்போனில் பேசியவர்களை விசாரிக்க போலீசார் இன்று (மே 15) முடிவு செய்தனர்.

நெல்லையில் திமுக துணைப் பொதுச்செயலாளரை மாவட்ட செயலாளர் இன்று (மே 25) சந்தித்தார். திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்காக நெல்லைக்கு வந்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் நேரில் சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆ.ராசாவுக்கு சால்வை அணிவித்தனர்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகளை ஏமாற்றி இட்லி, வடைக்கு கட்டணம் வாங்கிவிட்டு பின்னர் வடை இல்லாமல் இட்லி விற்பனை செய்வதாக வியாபாரிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளை தடுக்க ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ரயில் பயணிகள், பொதுமக்கள் விரும்புகின்றனர்.

நெல்லை ரயில் நிலையத்தில் மூன்று நாட்கள் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லை – புருலியா எக்ஸ்பிரஸ் பெட்டிகளை கொண்டு ஞாயிற்றுக்கிழமைதோறும் நெல்லையிலிருந்து தென்காசி, மதுரை வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டப்படும் என ரயில் பயணிகள் நல சங்கம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பிரதான அணைகளில் நீரும் அதிகரித்து வெளியேற்றப்படுகின்றது . அந்த வகையில் பாபநாசம் அணையில் இன்று (மே 15) காலை நிலவரப்படி 254.75 கன அடி தண்ணீரும் மணிமுத்தாறு அணையில் 245 கன அடி தண்ணீரும் விவசாயத்திற்காக வெளியேற்றப்படுகின்றது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று நாங்குநேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, நம்பியாறு, காக்காச்சி, கொடுமுடியாறு, மூலக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று (மே 15) காலை தகவல் தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 187 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில் மொத்தமாக 58 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தி உள்ளன. வெள்ளாங்குழி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், நெல்லை தாமிரபரணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று அரசுப்பள்ளிகள் மட்டும் தேர்வில் 100% வெற்றி பெற்றுள்ளன.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகியவை அண்டை மாவட்டங்களாகும். இந்த மாவட்டங்கள் பிளஸ் 1 தேர்வில் மாநில அளவில் அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் 93.86% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10ம் இடம் பிடித்துள்ளது. நெல்லை மாவட்டம் 93.32 சதவீதம் தேர்ச்சி பெற்று 11வது இடமும், தென்காசி மாவட்டம் 93.02% தேர்ச்சி பெற்று 12ஆம் இடமும் மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் பெற்றுள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்த விசாரணை தொடரும் நிலையில் நெல்லைக்கு வருகை தந்த தென் மண்டல போலீஸ் ஐஜி கண்ணன் சுமார் 3 மணி நேரம் உயர் அதிகாரிகளுடன் நேற்று (மே 14 ) ஆலோசனை நடத்தினார். நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, எஸ்பி சிலம்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் முக்கிய ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

நெல்லை மாவட்டத்திற்கு நேற்று (மே 14) பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா வருகை தந்தார். அவருக்கு பாளையங்கோட்டையில் வைத்து கட்சியினர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மானியின் செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் உடனிருந்தார்.
Sorry, no posts matched your criteria.