India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

“தொடர்ந்து கல்வி கற்போம்” திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, பள்ளி படிப்பை பாதியில் முடித்த மாணவர்கள் விவரம் நெல்லை மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டது. இதில் சுமார் 2000 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து கல்வி கற்போம் திட்டத்தில் சேர்ந்து பயனடைய பாளை மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தேவையான சிறப்பு பயிற்சி அளித்து துணைத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (மே 16) இரவு கன மழை வெளுத்து வாங்கியது. இந்த
நிலையில் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமாக 25 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 9.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும்போது பாட நோட்டு புத்தகங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் வரை உயரும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 10% வரை பாடநோட்டுகள் விலை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லாங் சைஸ் நோட்டு இப்போது 25 ரூபாயாக குறைந்துள்ளது. டிராயிங் நோட்டு, கணக்கு நோட்டு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது: மழை முன்னேற்பாடுகளை அனைத்து அலுவலர்களும் தயார் நிலையில் செய்ய வேண்டும். நீர் தேங்கும் பகுதிகளில் அகற்றுவதற்கு வசதியாக தேவையான ஜேசிபி இயந்திரம் மின் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்ட முழுவதும் அடுத்து வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மேலும் இன்று (மே 16) முதல் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கடந்த 13ஆம் தேதி விவசாயி சங்கர சுப்பு தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி தனது உடலில் தீ வைத்து கொண்டார். இதில் 90% காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (மே 16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இதுவரை பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிகளை திறன்பட கைது செய்த அதிகாரிகளை ஒன்றிணைத்து ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை இன்று காலை முதல் ஜெயக்குமார் உடல் மீட்டெடுக்கப்பட்ட தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு பேருந்தில் நேற்று ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கோவில்பட்டியை சேர்ந்த வாலிபர் அமர்ந்திருந்த இருக்கையில் ஆயுதங்கள் இருந்து தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தனக்கு அங்கு ஆயுதங்கள் இருந்ததே தெரியாது என இன்று (மே 16) வாக்கு மூலம் அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 700 குடும்பங்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த எஸ்டேட்டின் குத்தகை காலம் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் மாஞ்சோலை எஸ்டேட் மக்களின் வாழ்வுக்காக அரசே இந்த தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.