Tirunelveli

News May 19, 2024

101 நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் அழைப்பு

image

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாள் வரும் ஜூன்.3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் ஜூன்.3ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை 101 நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று (மே.18) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில், திமுகவினர் அனைவரும் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

News May 19, 2024

நீர் நிலைகளில் கால்நடைகளை இறக்க தடை

image

நெல்லை மாவட்டத்திற்கு இன்று (மே.19) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அடுத்த வரும் 5 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மறு உத்தரவு வரும் வரை எந்த நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் கால்நடைகள், வாகனங்களை நீர் நிலைகளில் இறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News May 18, 2024

மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை அறிக்கை

image

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஒரு சில இடங்களில் மற்றும் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 18) வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News May 18, 2024

நெல்லை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று (மே18) கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வள்ளியூர் புறவழிச் சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்ததால் ஒருவர் பலியானார். மேலும் இருவர் படுகாயத்துடன் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 18, 2024

நெல்லை: மின்னல் தாக்கி மாடுகள் உயிரிழப்பு!

image

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் நேற்று(மே 17) பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அயன் திருவாலீஸ்வரம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்ற விவசாயி, வயல் பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஒரு காளை மாடு, ஒரு பசு மாடு மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 18, 2024

இரட்டை சதத்தை தாண்டிய மழை அளவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (மே 18) காலை 8 மணி நிலவரப்படி மொத்தமாக 274.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 52.40 மி.மீ, நம்பியார் அணைப்பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News May 18, 2024

நெல்லைக்கு ஆரஞ்சு அலர்ட்..ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

நெல்லை மாவட்டத்துக்கு இன்றும்(மே 18), நாளையும்(மே 19) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் கண்காணிப்பில் உள்ளனர்.

News May 18, 2024

நெல்லை அணைகள் நிலவரம்!

image

நெல்லை மாவட்டத்தில் வானிலை சுழற்சியால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று(மே 18) நெல்லை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வெளியானது. இதுவரை பாபநாசத்தில் 50 அடியும், மணிமுத்தாறு 85 அடி, சேர்வலாறு 62 அடி, பச்சையாறு மற்றும் கொடுமுடி ஆறு அணைகளில் 12 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. தொடரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக நீர் வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News May 18, 2024

நெல்லை: புது மாப்பிள்ளை வெட்டிப் படுகொலை!

image

பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் நேற்று (மே 17) வழக்கம்போல் வேலையை முடித்துவிச்சு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். மணிக்கூண்டு அருகே சென்றபோது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இசக்கிமுத்துவிற்கு கடந்த மாதம் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

வனத்துறை கட்டுப்பாட்டில் செல்லும் 2 அருவிகள்

image

நேற்று குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். ஐந்தருவி ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், மேலும் 2 அருவிகளான பழைய அருவி மற்றும் பிரதான அருவிகளை தென்காசி வனத்துறையினரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் இன்று முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!