Tirunelveli

News March 20, 2024

தேர்தல் பணி ஆசிரியர்கள் அவசர கோரிக்கை

image

நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மார்ச் 24 மற்றும் ஏப்.7ம் தேதிகளில் நடக்கிறது. அதில் 24ம் தேதி பங்குனி உத்திரம், குருத்தோலை ஞாயிறு ஆகிய விழாக்கள் இருப்பதால் பயிற்சி வகுப்பை மாற்று தேதியில் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 20) அவசர கோரிக்கை மனு அளித்தனர்.

News March 20, 2024

நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ எதிர்ப்பு!

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இந்தநிலையில் நாளை (மார்ச் 21) தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் நெல்லை தொகுதியில் சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் இன்று (மார்ச் 19) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

நெல்லை: மார்ச் 21 இஎஸ்ஐ, பிஎஃப் குறைதீர் கூட்டம்

image

மார்ச் மாதத்திற்கான வருங்கால வைப்பு நிதி பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது நெல்லை மாவட்டத்திற்கான கூட்டம் வீரவநல்லூர், காந்திநகர் ஹரிகேசவநல்லூர் சாலையில் உள்ள அம்பாசமுத்திரம் சர்வோதயா சங்கத்தில் காலை 9 மணிமுதல் நடைபெறும். பிஎஃப், இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2024

தொகுதி ஒதுக்கீடு: எஸ்டிபிஐ வேட்பாளர் முடிவு

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்டதும் நெல்லை எஸ்டிபிஐ கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் தொகுதியில் கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று (மார்ச் 20) மாலை வெளியாகும் என கூறப்படுகிறது

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

News March 19, 2024

நெல்லையில் மீண்டும் சாதிய தாக்குதல்

image

தாழையூத்து செல்வன் நகர் பகுதியைச் சேர்ந்த வண்ணார் வகுப்பை சேர்ந்த 2 இளைஞர்களை அதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியை சேர்ந்த ஒரு கும்பல் இன்று (மார்ச் 19) தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சுடலைமுத்து என்பவர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் சுடலைமுத்துவை சிபிஐ எம்எல் கட்சியினர் இன்று மருத்துவமனையில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

News March 19, 2024

காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல்

image

திருநெல்வேலி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 19) திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வழக்கறிஞர் கமலநாதன் விருப்ப மனுவை கட்சி மூத்த நிர்வாகிகளிடம் தாக்கல் செய்தார்

News March 19, 2024

மக்களுக்கு மாவட்ட காவல்துறை வேண்டுகோள்

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் மாவட்ட காவல்துறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் 9498101765 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News March 19, 2024

ராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில வாய்ப்பு

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எடுத்துள்ள செய்தி குறிப்பு: டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 7ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் 8வது வகுப்பில் சேர்ந்து பயில ஜனவரி 2025 பருவத்திற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு பயனடையலாம்.

News March 19, 2024

முதியவர்களுக்கு எண் வெளியிட்ட நெல்லை காவல்துறை

image

நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து புகார் மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரடியாக சென்று கொடுக்க வேண்டியது இல்லை. மாறாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அலைபேசி எண் 9498181200 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்களது புகாரை தெரிவிக்கலாம் என மாநகர காவல் துறை இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!