Tirunelveli

News May 29, 2024

நெல்லை: தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 13ஆம் தேதி கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து 21ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதனை அடுத்து நெல்லை டவுன் ரத வீதிகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோயில் தேர்களை சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்து தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இன்று போடப்பட்டுள்ளது.

News May 29, 2024

நெல்லை: சிறுமிக்கு வன்கொடுமை… வாலிபருக்கு வலை

image

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கோவில்குளம் பகுதியை சேர்ந்தவர் சாலமோன் மகன் சந்திரன் (25). இவர் கடந்த 26ஆம் தேதி அன்று 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தெரிய வந்த சிறுமியின் தாய் அம்பை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வனிதா போக்சோ சட்டத்தில் நேற்று வழக்கு பதிவு செய்து சந்திரனை தேடி வருகிறார்.

News May 28, 2024

வெளிநாடுகளில் உயர் படிப்பை தொடரலாம்- ஆட்சியர்

image

பழங்குடியினர் நலம் கல்வி உதவித் தொகை ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதல்நிலை பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0462 2501076, 7338801275 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 28) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

சுற்றுலா வேன், கார் மோதி 12 பேர் படுகாயம்

image

ஆந்திராவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு வேனில் இன்று (மே 28) ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பாளை பொன்னாக்குடி பகுதி அருகே எதிரே வந்த கார் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேன் மற்றும் காரில் பயணம் செய்த 12 பேர் படுகாயம் அடைந்தனர். 12 பேர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

News May 28, 2024

பல்கலை.யில் பேராசிரியர்கள் திடீர் முற்றுகை

image

பல்கலைக்கழக வளாகத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் இன்று (மே 28) நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறையை முற்றுகையிட்டனர். விடைத்தாள் திருத்துவது மட்டுமே ஆசிரியர் பணி மதிப்பெண் பதிவேற்றம் செய்வது பல்கலைக்கழத்தின் பொறுப்பு எனக்கூறி இந்த முற்றுகையை நடத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.

News May 28, 2024

நெல்லை மழைக்கு வாய்ப்பு!

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே.28) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்யக்கூடும். தமிழகம் முழுவதும் கோடையில் பெய்து வந்த மழை தற்போது நின்று வெப்பநிலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 28, 2024

பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் பணி தொடக்கம்

image

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான புத்தகங்கள் பேட்டை காமராஜர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நோடல் மையங்களில் வந்து இறங்கி உள்ளன. இங்கிருந்து பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் வகுப்பு வாரியாக பிரித்து அனுப்பும் பணி இன்று (மே 28) தொடங்கியது.

News May 28, 2024

நெல்லை: 2,632 மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

image

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி நலிந்த பிரிவினருக்கான 25% இட ஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர்வதற்கு இணைய வழியாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு இன்று (மே 28) மாணவர் தேர்வு நடக்கிறது. நெல்லை மாவட்ட, பள்ளிகளில் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் கல்வித்துறை அதிகாரிகள் 2632 மாணவர்களை குலுக்கல் நடத்தி தற்போது தேர்வு செய்கின்றனர். இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.

News May 28, 2024

நெல்லையில் அரசு பேருந்துக்கு அபராதம்

image

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் நேற்று (மே 27) அபராதம் விதித்துள்ளது. மூன்றடைப்பு முப்புடாதி என்பவர் நெல்லையிலிருந்து ஊருக்கு செல்லும்போது அரசு பேருந்து நடத்துநர் வள்ளியூர் டிக்கெட்டை வழங்கி பின் மூன்றடைப்பில் நிற்காமல் சென்றதால் தொடர்ந்த வழக்கில் நாகர்கோவில் அரசு பேருந்து கிளை மேலாளர், நடத்துநருக்கு ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News May 28, 2024

நெல்லை – மும்பை ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 31 ஆம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக காலை 8 மணிக்குச் செல்லும் மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் வண்டி எண் 16340 ரயில் புனே வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுபோல் ஜூன் 1ம் தேதி சிஎஸ்டிஇல் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில் சிஎஸ்டி பூனே இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!