India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நாளை (மே 31) நெல்லைக்கு வருகை தர உள்ளார். அவர் நெல்லையில் கலைஞர் 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்பதற்கான பணிகளை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் புதிய கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 10ஆம் தேதி முதல் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் மைதிலி அறிவித்துள்ளார். தொடர்ந்து 14 ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று கூறியதாவது: மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழா விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நேற்று (மே 29) அரசு பேருந்தில் சென்ற பெண் காவலர்களை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளனர். நெல்லையிலிருந்து சென்ற அரசு பேருந்து வள்ளியூருக்குள் செல்லாமல் பெண் காவலர்கள் உள்ளிட்ட 4 பயணிகளை வள்ளியூர் புறவழிச் சாலையில் இறக்கி விட்டுள்ளனர். இதனை அடுத்து விதிகளை மீறிய அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

வருகிற 4ம் தேதி நெல்லை மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கையின் போது மையத்திற்குள் செல்போன் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனைகளுக்கும் அனுமதி கிடையாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி (48), சமூக ஆர்வலர் பெர்டின்ராயர் என்பவரை தனது ரியல் எஸ்டேட் தொழில் பிரச்சனை காரணமாக கூட்டாளிகள் மூலம் வெட்டிக் கொலை வெறி தாக்குதல் நடத்தினார். இவர் மீது மொத்தம் 12 வழக்குகள் உள்ள நிலையில் நேற்று மாநகர காவல் ஆணையர் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவிலும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழை நாளை (மே 30) தொடங்குகிறது. நெல்லை தென்காசி மலையோர பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் பருவ மழை தொடங்கும் என திருநெல்வேலி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மே 29) தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் மாதா மாளிகை திருமண மண்டபத்தில் இன்று (மே 29) முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில், 895 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது இந்தியாவின் 17ஆவது புலிகள் காப்பகமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். 1962இல் உருவாக்கப்பட்ட களக்காடு புலிகள் சரணாலயம் மற்றும் முண்டந்துறை புலிகள் சரணாலயம், இணைத்து 1988இல் இக்காப்பகம் உருவாக்கப்பட்டது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில் முக்கிய பணியாற்றியதற்காக, இதற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் சிறந்த விருது கிடைத்தது.

நெல்லை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி., சம்மன் அனுப்பியுள்ளது. எம் எல் ஏ நாகேந்திரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இதனால் பாஜக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது
Sorry, no posts matched your criteria.